கோவை மக்களின் பல வருட கனவு.. அவிநாசி ரோடு மேம்பாலத்தால்.. நிகழ போகும் நம்பவே முடியாத மாற்றம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தை அக்டோபர் 9-ந்தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த பாலம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும் போது, அவினாசி ரோடு மேம்பாலம் திறக்கப்பட்டதும் 10 நிமிடத்தில் விமானநிலையத்தை அடைய முடியும் என்றார்கள். அதேநேரம் இந்த பாலம் தான் தமிழ்நாட்டிலேயே மிக நீளமான மேம்பாலம் ஆகும். கோவையின் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ள அவினாசி ரோடு பாலம் பற்றி பார்ப்போம்

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் கடந்த 2003 அல்லது 2004ல் வாழ்ந்தவர், இப்போது மீண்டும் வந்தால், அப்படியே ஆச்சரியத்தில் உறைந்து போவார். ஆம், சென்னைக்கு அடுத்தபடியாக மிக வேகமான வளர்ச்சி தமிழ்நாட்டில் கோவையை போல் எங்குமே ஏற்படவில்லை.. புறநகர் ஆக இருந்த இடங்கள் எல்லாம் இன்று கோவையின் முக்கியமான நகரப்பகுதியாக மாறிவிட்டது. கோயம்புத்தூரின் கிராமங்கள் எல்லாம் நகரங்களின் வணிக மையங்களாக உருவெடுத்துவிட்டன.ஹ

Coimbatore Unbelievable changes are about to happen on the Avinashi Road flyover in Coimbatore

கோவை அவினாசி ரோடு மேம்பாலம்

கோவையும் திருப்பூரும் இரட்டை நகரம் என்று சொல்லும் அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகின்றன. ஏனெனில் கோவை மாநகரில் உள்ள தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அந்த அளவிற்கு இருக்கிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருந்த கோவை இன்றைக்கு 35 லட்சம் என்கிற அளவிற்கு வளர்ந்துள்ளது. இதன் காரணமாக வாகன நெருக்கமும் அதிகமாக உள்ளது. கோவையில கடந்த 15 வருடங்களில் ஐடி துறையும் வேகமாக வளர்ந்தது. கோவையின் வளர்ச்சி வேகம் காரணமாக உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன. அதன்படி பல்வேறு சாலைகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அப்படி கட்டப்பட்டு வந்த முக்கியமான மேம்பாலம் என்றால், அது அவினாசி ரோடு மேம்பாலம் தான்.

உப்பிலிப்பாளையம் டூ கோல்டுவின்ஸ்

இந்த அவினாசி சாலையை பொறுத்தவரை, சென்னையை ஒப்பிட்டால அண்ணா சாலை போன்று நெருக்கடியான சாலை. இங்கு உள்ள சிக்னல்கள் எண்ணிக்கை மிக அதிகம். இதனால் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதுவும் எப்படி என்றால், உப்பிலிப்பாளையம் தொடங்கி கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ. தூரத்திற்கு ரூ.1,791 கோடியில் மேம்பால கட்டுமானப்பணி தொடங்கியது. இதற்காக 300 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டு, அதன்மீது தளங்கள் அமைக்கப்பட்டது. பாலங்கள் கட்டும் பணி படிப்படியாக முடிந்து வந்தது.இறுதி கட்டமாக பீளமேடு மேம்பாலம் அருகே மட்டும் பணிகள் பாக்கி இருந்தது. அங்குமே பணிகள் முடிந்தது.

முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

இந்த மேம்பாலத்தில் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதனால் எப்போது பாலம் பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தை அடுத்த மாதம் 9-ந்தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மேம்பாலம் குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், அவினாசி ரோடு மேம்பாலம் தமிழகத்தின் மிக நீண்ட மேம்பாலம் என்ற பெருமை கிடைத்துள்ளது . இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், சென்னை செல்வது எளிதாவிடும். மேம்பால தூரத்தை 10 முதல் 12 நிமிடங்களில் கடக்க முடியும் என்பதால், உப்பிலிபாளையத்தில் இருந்து விமானநிலையத்துக்கு 10 நிமிடங்களில் போக முடியும். மேம்பாலத்தில் அனைத்து வகையான வாகனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

பாலத்தில் மைய தடுப்பு

பாலத்தின் மீது பெயர் பலகை, மைய தடுப்பு, ஒளிரும் விளக்கு போன்றவை அமைக்கப்பட இருக்கிறது.. ஏறு தளம், இறங்கு தளம் இருப்பதால் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் மேம்பாலத்தை பயன்படுத்தலாம். மேம்பாலம் திறக்கப்பட்டால் அவினாசி ரோட்டில் 50 முதல் 60 சதவீதம் போக்குவரத்து குறைந்து விடும் என்று நம்புகிறோம்.

அதிக வாகனங்கள் செல்லும்

அதேநேரம் கோவையைவிட்டு வெளியே செல்லும் அனைத்து வாகனங்களுமே மேம்பாலத்தில் செல்லும் என்பதால், சாலையை விட மேம்பாலத்தில் அதிக வாகனங்கள் செல்ல வாய்ப்புள்ளது. மேம்பாலம் கோவையின் பிரதான அடையாளமாக இனி இருக்கும். இந்த மேம்பாலத்தில் மழை பெய்தால், அந்த தண்ணீர் குழாய் மூலமாக ரோட்டிற்கு சென்று அங்கேயுள்ள மழை நீர் கட்டமைப்பில் சேகரிக்க வசதி செய்யப்பட்டிருக்கிறது என்றார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+