ஆபாச வீடியோ.. அடிக்கடி உல்லாசம்.. திருமணம் செய்ய மறுக்கும் கணவரின் நண்பர் மீது பெண் புகார்
கோவை: கோவையில் நண்பர் மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி அவ்வப்போது உறவு கொண்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக இளைஞரை போலீஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறியிருப்பதாவது: கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் 25 வயது இளம் பெண். இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கும் எனது கணவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

கணவர் தொழில்
என் கணவரது தொழிலுக்கு நானும் உதவியாக இருந்தேன். எங்களது கடைக்கு போத்தனூரைச் சேர்ந்த சங்கர் என்பவர் அடிக்கடி வருவார். இவர் சென்னை மற்றும் கோவையில் கட்டுமான பொருட்களை விற்பனை செய்கிறார். இவர் எனது கணவரின் நண்பரும் கூட. இதனால் எனக்கும் சங்கருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

கடையில் இல்லாத நேரம்
எனது கணவர் கடையில் இல்லாத நேரங்களில் அவர் கடைக்கு வருவார், நட்பு ரீதியில் அவருடன் பழகினேன். ஒரு நாள் என்னை ஒரு பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நாங்கள் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இதையடுத்து அந்த புகைப்படத்தை காட்டி சங்கர் என்னை மிரட்டி வந்தார்.

புகைப்படம்
அந்த புகைப்படத்தை எனது கணவரிடம் காட்டி விடுவேன் என மிரட்டினார். அந்த புகைப்படத்தை காட்டி என்னை மீண்டும் ஹோட்டலுக்கு வருமாறு கட்டாயப்படுத்தினார். உடனே நானும் ஓட்டலுக்கு சென்றேன். அங்கு அவர் என்னை மிரட்டி பாலியல் உறவு கொண்டார். அதை எனக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

கணவருடன் விவாகரத்து
இதையடுத்து என்னை அவருக்கு பிடித்திருக்கிறது என்றும் எனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு வந்துவிடு என்றும் அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் என்னிடம் ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய நானும் எனது கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

திருமணம் செய்ய மறுப்பு
சங்கர் தொடர்ந்து என்னிடம் திருமணம் செய்வதாக கூறியே பல முறை உறவு கொண்டுள்ளார். நான் வர முடியாது என்றால் உடனே ஆபாச வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டி வருகிறார். என்னிடம் அவர் பணம், நகைகளை பெற்றுள்ளார். என்னை திருமணம் செய்து கொள் என்றாலும் மறுக்கிறார். எனவே என்னை ஏமாற்றிய சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து சங்கரை போலீஸார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications