பொள்ளாச்சியில் இறங்க வேண்டிய தம்பதி.. பாலக்காடு கூட்டிசென்ற ஆம்னி பஸ் ஓட்டுநர்.. என்ன நடந்தது
கோவை: சென்னையில் இருந்து கேரளாவின் பாலக்காடு நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் திருச்சியில் ஒரு தம்பதி டிக்கெட் புக்கிங் செய்திருந்தனர். நள்ளிரவில் திருச்சியில் ஏறி அந்த தம்பதி அதிகாலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் அந்த தம்பதி பொள்ளாச்சியில் இறங்கவில்லை.. தூங்கிய அவர்களை நடத்துனர் எழுப்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பாலக்காடு அருகில் தான் போய் இறங்கி உள்ளார்கள். இந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் ஆம்னி பேருந்துகளில் செல்லும் போது, சரியாக இடம் வருவதற்குள் எழுந்துவிட வேண்டும். மாறாக தூங்கிவிட்டால், இறங்க வேண்டிய இடத்தில் இறங்க முடியாமல் போகும். ஏனெனில் சில நேரங்களில் ஆம்னி பேருந்து நடத்துனர்கள்.. எழுப்பாமல் விட்டுவிடுவார்கள்.

சென்னையில் இருந்து மதுரை செல்லும் ஆம்னி பேருந்தில் ஏறிய பின்னர், திருச்சியில் இறங்க வேண்டியவர் கவனிக்க மறந்தால், மதுரையில் தான் போய் இறங்க வேண்டிய நிலை வரும். அதேபோல் திண்டுக்கல் அல்லது தேனி வண்டியில் ஏறியவர் திருச்சியில் இறங்காமல் தூங்கினால் திண்டுக்கல்லில் தான் இறங்க வேண்டிய நிலை வரும். கிட்டத்தட்ட 100 கிமீ தூரத்திற்கும், 140 கி மீ தூரத்திற்கும் அடுத்த பேருந்து நிறுத்தம் பற்றி சில ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் வாயைக்கூட திறக்க மாட்டார்கள்.
கொடைக்கானல்
ஒருமுறை கொடைக்கானல் வண்டியில் ஏறிய நபர் ஒருவர், திண்டுக்கல்லில் இறங்க வேண்டும். அவர் அயர்ந்து தூங்கிவிட்டார். நடத்துனர் சத்தம் போட்டுள்ளார். திண்டுக்கல் யாராவது இருக்கிறார்களா என்று சத்தமாகவே கேட்டுள்ளார். ஆனால் அவர் நல்ல தூக்கத்தில் இருந்த காரணத்தால் சத்தம் கேட்கவே இல்லை. இதன் காரணமாக அவர் வத்தலக்குண்டு தாண்டி, கொடைக்கானல் மலையில் செல்லும் போதுதான் எழுந்துள்ளார். எழுந்து பார்த்தால் பெருமாள் மலை.. அய்யய்யோ என்ன இப்படி ஆகிடுச்சு என்று நடத்துனருடன் சண்டை போட்டுள்ளார். இறுதியாக வேறு வழியில்லாமல் கொடைக்கானல் சென்று அங்கிருந்து வேறு பேருந்தில் திண்டுக்கல் ஏறி சென்றார்.
பெருங்களத்தூர்
அதேபோல் சென்னையில் பெருங்களத்தூரில் இறங்க வேண்டியவர் கோயம்பேட்டில் போய் இறங்கிய சம்பவங்களும் நடந்துள்ளது. மேலும் தென்சென்னை பகுதியில் மேடவாக்கத்தில் இறங்க வேண்டியவர் கடைசி நிறுத்தமான வேளச்சேரியில் இறங்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. ஆம்னி பேருந்தில் அயர்ந்து தூங்கும் சத்தம் போட்டு எழுப்புவதை தாண்டி, இறுதியில் அவர்கள் இறங்கி செல்வதை உறுதி செய்ய வேண்டியது ஆம்னி பேருந்து நடத்துனரின் பொறுப்பு..அப்படி சிலர் செய்வது இல்லை. இதன் காரணமாக பலர் பரிதவிக்கிறார்கள். அந்த வகையில் திருச்சியில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்ல ஆம்னி பேருந்தில் ஏறியவர் கேரளாவின் எல்லையில் இறக்கி விடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆன்லைனில் புக்கிங்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த ரஞ்சன் என்பவர், தனது மனைவி மற்றும் கை குழந்தையுடன் திருச்சி சென்றுவிட்டு சொந்த ஊர் செல்வதற்கு ஆம்னி பஸ்ஸினை ஆன்லைனில் தேடினார். அதில் ஒரு ஆம்னி பஸ்ஸில் டிக்கெட் முன்பதிவு செய்தார். நள்ளிரவு 12.30க்கு வர வேண்டிய அந்த பேருந்து, ஒரு மணிக்கே வந்ததாக கூறப்படுகிறது. குழந்தை மற்றும் மனைவியுடன் நள்ளிரவில் பேருந்துநிலையத்தில் காத்திருந்து ஏறிய ரஞ்சன், படுக்கை வசதி கொண்ட பேருந்து என்பதால் தூங்கிவிட்டார். பொள்ளாச்சிக்கு 4.30 மணிக்கு இறங்க வேண்டும். பேருந்து ஐந்து மணிக்கு பொள்ளாச்சிக்கு சென்றுள்ளது. இடையில் ஒவ்வொரு ஊரிலும் இறங்கவேண்டிய பயணிகளை நடத்துனர், கத்தி கத்தி எழுப்பி, இறக்கி சென்றுள்ளார்.
வாக்குவாதம்
பொள்ளாச்சியிலும் அப்படி கத்தி உள்ளார். ஆனால் அயர்ந்து தூங்கியதால் டிரைவரின் சத்தம் கேட்கவில்லை.. இதனிடையே ஓட்டுநர், பொள்ளாச்சிக்கு முன்பதிவு செய்தவர்கள் இறங்கிவிட்டார்களா என்பதை உறுதி செய்யாமலேயே கேரளாவின் பாலக்காட்டிற்கு ஓட்டினார். பொள்ளாச்சியை தாண்டி 15 கிமீ பயணித்த பின்னரே ரஞ்சன் எழுந்துள்ளார். அப்போது தான் வண்டி பொள்ளாச்சியை தாண்டி சென்றதை கண்டு கூச்சலிட்டுள்ளார்.
கொட்டும் மழை
தன்னை பொள்ளாச்சியில் இறக்கிவிடாதது ஏன் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர், சத்தம் போட்டோம் என்று கூறியிருக்கிறார். நான் இறங்கவில்லையே. நீங்கள் அதனை உறுதி செய்திருக்க வேண்டும் அல்லவா என்று கேள்வி எழுப்பிருக்கிறார் ரஞ்சன். ஆனால் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.. அவர்களை சுமார் 25 கிமீ தூரம் தள்ளி கொட்டும் மழையில் கேரள எல்லையில் இறங்கிவிட்டுள்ளனர். அங்கு ஒரு தனியார் பேருந்து ஓட்டுனர் இவர்களை பொள்ளாச்சிக்கு ஏற்றி சென்றுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications