கல்பனாவுக்கு வந்த கடும் கோபம்.. மாமியார் தலையை பிடித்து.. பலத்த கடி.. 6 தையல்.. ஷாக் சம்பவம்!
மாமியார் தலையை கடித்த மருமகள் கைது செய்யப்பட்டார்
பொள்ளாச்சி: கல்பனாவுக்கு வந்தது பாருங்க கோபம்.. மாமியார் தலையை கெட்டியாக பிடித்து கடித்துவிட்டார்.. இதனால் மாமியார் தலையில் ரத்தம் கொட்டியதுடன், 6 தையல்களும் போடப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி.. 62 வயதாகும் இவர் ஒரு பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார் - மருமகள் கல்பனா. வயது 33 ஆகிறது!

சரவணகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.. இதனால் கணவன் - மனைவிக்குள் எப்பவுமே தகராறு இருந்துள்ளது.. எப்போதெல்லாம் மனைவியுடன் சண்டை போடுகிறாரோ, அப்போதெல்லாம் தன்னுடைய அம்மா வீட்டுக்கு சரவணகுமார் வந்துவிடுவாராம். இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்படுமாம்... அடிதடி கூட இவர்களுக்குள் நடக்கும் என்கிறார்கள்.
இப்படித்தான் போன ஜனவரியில், கல்பனா தன்னை அடித்துவிட்டதாக மாமியார் நாகேஸ்வரி, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் தந்தார்.. இதனடிப்படையில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இப்படி மாமியார் போலீசில் தன்னை பற்றி புகார் கூறியதில் இருந்தே, மருமகளுக்கு ஆத்திரம் அதிகமாகி இருந்தது.. முன்பைவிட மாமியாரை திட்டிக் கொண்டே இருந்தார்.. தேவையில்லாமல் சண்டை போட்டு வந்துள்ளார்.. தன் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று சொல்லி மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் நாகேஸ்வரி மின்நகர் பகுதிக்கு இன்று வந்திருந்தார்.. மாமியாரை பார்த்ததும் கல்பனாவுக்கு டென்ஷன் ஆகிவிட்டது.. அதனால் மாமியாரிடம் திரும்பவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வழக்கை வாபஸ் வாங்கவே மாட்டேன் என்று நாகேஸ்வரி சொல்லவும், ஆத்திரமடைந்த கல்பனா.. மாமியாரின் தலையை கெட்டியாக பிடித்து கொண்டு பலமாக கடித்தார்.
இதில் நாகேஸ்வரி வலி பொறுக்க முடியாமல் அலறி சத்தம்போட்டார். தலையில் படுகாயம் வந்து ரத்தம் கொட்டிவிட்டது.. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் நாகேஸ்வரிக்கு 6 தையல் போடப்பட்டது. ஏற்கனவே புகார் உள்ளதுடன், இப்போது மாமியாரை கடித்த புகாரும் போலீசில் பதிவாகி உள்ளது.
இதையடுத்து கல்பனாவை போலீசார் கைது செய்தனர். மருமகள் கடித்து, மாமியாரின் தலையில் 6 தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும், வினோதத்தையும் அந்த பகுதி மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications