பயங்கரம்! கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை.. தீராத கடன் பிரச்சினையால் விபரீதம்
கோவை: கோவை அடுத்துள்ள வடவள்ளி பகுதியில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள வடவள்ளி அருகில் உள்ள வேம்பு நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்.. 34 வயதான இவர் இன்ஜினியரிங் டிசைனர் இருந்தார். இவரது மனைவி லக்ஷயா, அங்கேயே குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.
இந்த தம்பதிக்கு 10 வயதே ஆன ரக்ஷிதா என்ற மகளும் இருந்தார். மேலும், ராஜேஷின் அம்மா பிரேமா(73) என்பவரும் இவர்களுடன் தான் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை.. வீடும் வெளியே பூட்டப்படவில்லை.

இதற்கிடையே இன்று (ஜூலை 22) மாலை வீட்டிற்கு உள்ளே இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகம் கொண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவுகள் உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததையும் அவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். உள்ளே போலீசார் கண்ட காட்சி அவர்களை உறைய வைப்பதாக இருந்துள்ளது.
வீட்டின் உள்ளே ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். அவருக்கு அருகிலேயே லக்ஷயா, ரக்ஷிதா, பிரேமா ஆகியோரின் சடலங்கள் இருந்துள்ளனர். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர்களின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடன் தொல்லை காரணமாக இவர்கள் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் இப்போது அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications