கோவை ஐடி துறையில் அடுத்த சம்பவம்.. அமைச்சர் பிடிஆர் சூப்பர் நியூஸ்
கோவை: தொழில் நகரான கோவை மாவட்டத்தில் குறு, சிறு நிறுவனங்கள், நூற்பாலை, பம்ப் மோட்டார் உற்பத்தி, கிரைண்டர் உற்பத்தி என்று பல தொழில்களுக்கு பிரபலம். சமீபகாலமாக ஐடி துறையிலும் கோவை நல்ல வளர்ச்சியை எட்டி வருகிறது. அரசு, தனியார் நிறுவனங்கள் என்று புதிது புதிதாக ஏராளமான நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார்.
கோவை விளாங்குறிச்சி பகுதியில் தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகம் உள்ளது. அங்கு ரூ.110 கோடி மதிப்பில் 3 லட்சம் பரப்பளவில் சதுரடி எல்காட் ஐடி பார்க் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "எல்காட் ஐடி பார்க் திட்டம், அதிமுக ஆட்சியில் கடந்த 2020ம் ஆண்டு அறிவித்தனர். அப்போதிருந்து பணிகள் சற்று தாமதமானது. தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, முதலமைச்சர் திறந்து வைப்பார்.
கோவையில் இருக்கும் மிகப்பெரிய துறை இது. பல்வேறு காரணங்களால் கட்டிடம் தாமதமானாலும், உரிய விதிமுறைகள் சான்றிதழ் பெற்று திறக்க உள்ளோம். இதன்மூலம் குறைந்தபட்சம் 3,250க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதிமுக ஆட்சியில் 2 லட்சம் சதுரடி பரப்பளவில் தான் இந்த எல்காட் பார்க் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது 3 லட்சம் சதுரடியில் கட்டப்பட்டு வருகிறது. உண்மையில் இங்கு 6 லட்சம் சதுரடிக்கு டிமேண்ட் உள்ளது.
ஒரு சில நிறுவனங்கள் முழுமையாக இந்த இடத்தை கேட்கின்றனர். ஆனால் அது நியாயமாக இருக்காது என்று கருதுகிறோம். இதற்காக சில விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம். சுமார் 15,000 சதுர அடி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். அதேபோல குறு சிறு நிறுவனங்கள், புதிய தொழில்முனைவோருக்கும் இதில் வாய்ப்பு கிடைக்கும். மேலும், ஹைடெக் சிட்டி உருவாக்கும் பணிகளும் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.
அதில் பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், குடியிருப்புப் பகுதி உள்ளிட்டவை இருக்கும். முக்கியமாக ஐடி துறையில் கோவையில் அலுவலகத்துக்கான இடத்துக்கு நிறைய தேவை உள்ளது. நிதி துறையில் சீர்திருத்தம் செய்தது போல, தகவல் தொழில்நுட்பத் துறையில் சீர் திருத்தம் செய்யவே என்னை இந்தத் துறைக்கு அனுப்பியிருப்பதாக முதலமைச்சர் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப துறையை பொறுத்தவரை, சில இடங்களில் அணுகுமுறையில் திருத்தம் தேவைப்படுகிறது. அரசுத் துறைகள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இல்லாமல் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். வட சென்னை, ஓசூர் கோவை போன்ற இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இரு ஆண்டுகளுக்கு முன்பே நிதி நிலை அறிக்கையிலும் இதை கூறியிருக்கிறோம்.
நான் நிதி அமைச்சராக இருந்தபோது, ஜிஎஸ்டியில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டியிருந்தேன். ஜிஎஸ்டி குறித்து நிதி அமைச்சருக்கு அறிக்கையும் கொடுத்துள்ளோம். திட்டமிடுதலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஒன்றிய அரசின் மனம்பான்மை சரியாக இருக்க வேண்டும். மிகவும் வேகமாக இதில் உள்ள தவறுகளை சரி செய்ய வேண்டும்."என்றார்.












Click it and Unblock the Notifications