கோவை டூ நீலகிரி.. ஒரு ஆள் கிட்ட நெருங்க முடியல.. ஆ.ராசாவுக்கு அப்படியொரு வரவேற்பு தந்த திமுக.. திக..!
கோவை: திமுக துணை பொதுச்செயலாளராக 2-வது முறை பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நீலகிரி சென்ற ஆ.ராசாவுக்கு, வான வேடிக்கையுடன் கூடிய வரவேற்பை தந்து அசத்தியிருக்கிறார்கள் திமுகவினர்.
கோவை விமான நிலையத்தில் தொடங்கி நீலகிரி வரை ஆ.ராசாவுக்கு பல்வேறு இடங்களில் மேடை போட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆ.ராசாவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ஆள் கூட கிட்ட நெருங்க முடியாத வகையில் அவருக்கு அரணாக நின்றார்கள் திமுகவினர்.

நீலகிரி தொகுதி
திமுகவின் 15-வது பொதுக்குழு தேர்தலில் 2வது முறையாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக தனது சொந்த தொகுதியான நீலகிரி சென்றிருக்கிறார் ஆ.ராசா. சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்ற ஆ.ராசாவுக்கு அங்கு மேளதாளங்கள் முழங்க ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னை வரவேற்க வந்த கூட்டத்தை கண்டு நெகிழ்ந்து போன ஆ.ராசா, காரிலிருந்த சன் ரூஃபை திறந்து திறந்தவெளியில் கட்சியினரை பார்த்து கை அசைத்தபடி விமான நிலையத்தை கடந்தார்.

உற்சாக வரவேற்பு
கோவை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அன்னூர், மேட்டுப்பாளையம், என பல இடங்களில் கட்சியினர் தன்னை வரவேற்க காத்திருந்ததை கண்டு காரை நிறுத்தி இறங்கிவிட்டார் ஆ.ராசா. அவர்கள் அளித்த பொன்னாடைகள், புத்தகங்களை பெற்றுக்கொண்டு மைக் பிடித்து பேசவும் செய்தார் ஆ.ராசா. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், ஆ.ராசாவை வரவேற்க வந்தவர்கள் திமுகவினர் மட்டுமல்ல திராவிடர் கழகத்தினரும், மனிதநேய மக்கள் கட்சியினரும் அதிகளவில் வந்திருந்தார்கள்.

பாஜகவினர் போராட்டம்
அண்மையில் ஆ.ராசா பேசிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜகவினர், போராட்டம் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ஆள் கூட கிட்ட நெருங்க முடியாத வகையில் அவருக்கு அரணாக நின்றார்கள் திமுக கூட்டணிக் கட்சியினர். கனிமொழி, துரைமுருகன் ஆகியோருக்கு கூட திமுகவினர் மட்டுமே காட்பாடியிலும்,தூத்துக்குடியிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால் ஆ.ராசாவுக்கு மட்டுமே திமுகவினர் மட்டுமல்லாமல் திமுக கூட்டணிக் கட்சியினரும் நீலகிரி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

தொகுதியில் முகாம்
ஓரிரு நாட்கள் நீலகிரியில் ஆ.ராசா முகாமிட்டிருப்பார் என்றும் பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரியில் பாஜக களமிறங்க திட்டமிட்டுள்ள நிலையில் ஆ.ராசா அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஊட்டி குடியிருப்புக்குள் புகுந்த கழுகு.. முதுகில் மர்ம கருவியைப் பார்த்து ஆடிப்போன மக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications