குடி போதையில் இப்படியா.. மினி வேன் டிரைவரை கடித்த திமுக நிர்வாகி.. தூக்கி ஜெயிலில் அடைத்த போலீசார்!
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மினி வேன் ஓட்டுநருடன் ரகளையில் ஈடுபட்டு அவரை கடித்து வைத்த திமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பைசல். இவர் கோவை தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணியின் இணைச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி சகர்பானு அம்பராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த பைசல், அம்பராம்பாளையம் தனியார் மருத்துவமனை அருகே உள்ள காலியிடத்தில் நின்றிருந்த இளையராஜா என்பவரது மினி வேன் சக்கரத்தில் காற்றை பிடுங்கி விட்டுள்ளார். 4 டயர்களிலும் காற்றை பிடுங்கி விட்டுள்ளார்.
இதையடுத்து அருகில் உள்ள ஆட்டோ ஸ்டேண்ட்டில் இருந்து வந்த இளையராஜா எதற்காக வண்டியில் காற்றை திறந்து விட்டீர்கள் என பைசலிடம் கேட்டபோது, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி பலமாக தாக்கியுள்ளார் பைசல். மேலும் நெஞ்சு பகுதியில் கடித்து காயப்படுத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இளையராஜா பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து இளையராஜா ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பைசல் மீது பொது இடத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கி காயப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications