பொள்ளாச்சியில் கொடி நாட்டிய திமுக... 39 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக வென்றது
Recommended Video
பொள்ளாச்சி: 39 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக நேரடியாக வெற்றி பெற்றுள்ளது.
542 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவைப்படுகிறது. இதில், பாஜக கூட்டணி 300 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றி உள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய 20 தொகுதிகள் போக, மீதமுள்ள 20 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது திமுக. அதில், அதிமுக, திமுக நேரடியாக போட்டியிடும், 8 மக்களவைத் தொகுதிகளில் பொள்ளாச்சியும் ஒன்றாகும். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சண்முகசுந்தரமும், அதிமுக சார்பில் மகேந்திரனும் போட்டியிட்டனர்.
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் 22 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் 5,54,230 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 3,78,347 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சி 59,693 வாக்குகள் பெற்று மூன்றாம் பிடித்தது. இறுதியில், 1,75,883 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் வெற்றி பெற்றார்.
இதையடுத்து 39 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி தொகுதியில் திமுக நேரடியாக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு திமுக வேட்பாளர் சி.டி.தண்டபானி வெற்றி பெற்றிருந்தார்.
இதன்பின் திமுக கூட்டணியில் 1996-ல் தமாகா, 1999, 2004 லில் மதிமுக வென்றது. இதன் பின்னர் நடந்த இரு தேர்தல்களிலும் அதிமுக வெற்றி கனியை ருசித்தது. தற்போது, மீண்டும் 39 ஆண்டுகளுக்குப் பின் திமுகவின் வசம் பொள்ளாச்சி தொகுதி வந்துள்ளதால், அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிமுக பிரமுகர்களின் பெயர்கள் அடிப்பட்ட சம்பவம், அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications