செந்தில்பாலாஜி கைதை கண்டித்து போராட்டம்! கருஞ்சட்டையுடன் களமிறங்கிய திராவிட இயக்க தமிழர் பேரவை!
கோவை: அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ததை கண்டித்து திராவிட இயக்க தமிழர் பேரவையினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்தில்பாலாஜிக்கு துணை நிற்போம் என்று முழங்கியபடி வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

''என்ன ஆச்சு என்ன ஆச்சு அதானி அடித்த பணம் என்ன ஆச்சு'' என்றும் ''கொங்கு மண்டலத்தில் சங்கிகளுக்கு சவக்குழி வெட்டிய செந்தில்பாலாஜி'' எனவும் வாசகங்கள் தாங்கிய பதாகைகளை திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் கைகளில் எடுத்துச்சென்றனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளாக கைது செய்யப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் ஆகின்றன. அவரது விடுதலை கேள்விக்குறியாக உள்ள நிலையில், இதய அறுவை சிகிச்சை காரணமாக தற்போது காவேரி மருத்துவமனையில் இருந்து வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
இதனிடையே திமுக சார்பிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் கோவையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கரூரில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக இப்போது செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக சுப.வீரபாண்டியனின் திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் களமிறங்கியுள்ளது.
இந்த போராட்டத்தில் பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் உட்பட திமுக பிரமுகர்கள் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டு செந்தில்பாலாஜிக்காக முழக்கங்கள் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications