விடாத அமலாக்கத் துறை.. லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் 2ஆவது நாளாக சோதனை.. யார் இவர்?
கோவை: கோவையில் துடியலூரில் உள்ள லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் 2ஆவது நாளாக அமலாக்கத் துறை இன்றும் சோதனை நடத்தி வருகிறது.
கோவை துடியலூரில் வெள்ளைகிணர் பகுதியில் உள்ள மார்டின் வீட்டில் அமலாக்கத் துறை நேற்று முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி தொழிலில் கொடி கட்டி பறக்கும் மார்டின் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மார்டின் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. கடந்த முறை மார்டினின் மகன், உறவினர்கள், நிர்வாகிள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடந்த நிலையில் தற்போது மார்டினின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நேற்று தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.
அது போல் மார்டினின் வீட்டில் வருமான வரித் துறையும் நேற்று சோதனை நடத்தியது. அவருடைய மருமகனுக்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டன் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.
பின்னணி என்ன?: கோவையை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் மார்டின். லாட்டரி விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறார். இவர் தற்போது சென்னையில் குடியிருந்து வருகிறார். கோவை- மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவில் மார்டினுக்கு சொந்தமாக வீடு உள்ளது.

இதற்கு அருகே அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்டினின் ரூ 457 கோடி சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டது. சென்னையில் அவருடைய மருமகன் வீட்டிலும் வருமான வரித் துறை சோதனை நடந்தது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சென்னையில் ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் கோவையில் 3 இடங்களிலும் இந்த சோதனை நடந்தது. அது போல் சென்னை ஆழ்வார்பேட்டை போயஸ் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மார்டின் மருமகன் வீடு உள்ளிட்ட சில இடங்களிலும் அமலாக்கத் துறையினர் மே மாதம் சோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Kerala lottery: கேரள லாட்டரியில் 30 லட்சம் பரிசு.. மறந்துபோன உரிமையாளர்! கேரள வியாபாரி செய்த காரியம்! என்ன மனுஷன்யா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications