"என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது".. பச்சைத் துண்டுடன் ஆவேசமாக பேசிய எடப்பாடி பழனிசாமி!
கோவை: "நான் யாருக்கும் அடிமையாக மாட்டேன்.. பணத்தாலும் புகழாலும் என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது." என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 1,916 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த அன்றைய முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளியில் இன்று விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காளைகள் பூட்டிய மாட்டு வண்டியில் வந்தார். எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் மாட்டுவண்டியில் வந்தார். விழாவிற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை மாட்டு வண்டியில் சீர் வரிசையாக கொண்டுவந்து வழங்கினர்.
பின்னர் இந்த விழா மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஒரு விவசாயியாக தொடங்கி முதலமைச்சராக ஆவேன் என கனவிலும் நினைத்தது இல்லை. ஒரு விவசாயியாக நான் எனது பிறவிப்பயனை அடைந்து விட்டேன். அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு எதுவும் செய்யாமலேயே வந்து திறந்து வைப்பவர்களும் உள்ளனர்.
விவசாயிகளின் பங்களிப்போடு அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது. உழைப்பது விவசாயிகள், ஆனால் அனுபவிப்பது வேறு ஒருவர். விவசாயிகளின் கனவை நிறைவேற்ற மாநில அரசு நிதியில் இருந்தே திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டேன். 3 மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. பணத்திற்கோ, புகழுக்கோ நான் மயங்கமாட்டேன். திறமையற்ற அரசு தான் தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளையும் நிரப்புவது அவசியம் என அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுத்தப்பட்டது. மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசு நிதியை ஒதுக்கித் திட்டத்தை தொடங்கி வைத்தேன்.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் 85 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு விட்டன. ஆட்சி மாறியதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வெறும் 15 சதவீத பணிகளை விரைந்து முடிக்காமல் திமுக அரசு கிடப்பில் போட்டது. எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவர முயற்சி செய்யாமல் திறந்து மட்டுமே வைத்து வருகிறது." என விமர்சித்துப் பேசியுள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications