கோவையில் தொண்டர்கள் தந்த உற்சாகம்! காரில் ஏறாமல் ஏர்போர்ட்டிலிருந்து 500 மீ நடந்தே சென்ற ஸ்டாலின்!
தொண்டர்கள் கொடுத்த உற்சாகமிகு வரவேற்பால் ஸ்டாலின் மகிழ்ச்சி.
கோவை: கோவையில் தொண்டர்கள் கொடுத்த உற்சாகமிகு வரவேற்பால் காரில் ஏறாமல் 500 மீட்டர் வரை நடந்தே சென்று அவர்கள் கொடுத்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
விட்டால் இன்னும் சில தூரம் முதல்வர் நடந்தே சென்று தொண்டர்களை சந்தித்திருப்பார். ஆனால் அதற்குள் முதல்வரிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி ஏதோ கூற உடனடியாக காரில் ஏறி தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு புறப்பட்டுவிட்டார்.
இதனிடையே காரில் ஏறிச் சென்றாலும் ஓட்டுநரிடம் மிகவும் மெதுவாக காரை இயக்கும்படி கூறியதால், முதல்வரை வரவேற்க சென்றிருந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் ஹேப்பி.

ஈரோடு பிரச்சாரம்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இதற்காக நேற்றிரவே கோவை வந்துவிட்டார். கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்க வழக்கம் போல் தனது பிரம்மாண்டத்தை காட்டியிருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி. ஏர்போர்ட் வாயில் தொடங்கி காளப்பட்டி பிரிவு வரை சாலையின் இரு மருங்கிலும் தொண்டர்கள் புத்தகங்கள், பொன்னாடைகள், பூங்கொத்துக்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பரிசுப் பொருட்களுடன் முதல்வரை வரவேற்க காத்திருந்தனர்.

ஏர்போர்ட் நுழைவு வாயில்
வழக்கமாக விமானத்திலிருந்து இறங்கியதும் விஐபி கேட் வழியாக காரில் வரும் முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு காரில் ஏறாமல் நடந்தே சென்று தொண்டர்களை சந்தித்தார். சுமார் 500 மீட்டர் தூரம் நடந்தே சென்றுவிட்டார். விட்டால் இன்னும் சில தூரம் அவர் நடந்தே சென்றிருப்பார் போல் இருந்தது. ஆனால் அதற்குள் முதல்வரிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி ஏதோ கூற உடனடியாக காரில் ஏறி தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு புறப்பட்டுவிட்டார்.

மிகவும் மெதுவாக
இதனிடையே தன்னை வரவேற்பதற்காக வந்திருக்கக் கூடிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்கும் வகையில் காளப்பட்டி பிரிவு CITRA வரை காரை மிகவும் மெதுவாக இயக்கக் கூறிவிட்டு அனைவரையும் சந்தித்த வண்ணம் முதல்வர் பயணித்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, முத்துசாமி மற்றும் அவரது உதவியாளர் தினேஷ் ஆகியோர் பயணித்தார்கள்.

வேறு யாரும் வரவில்லை
கோவை வந்த முதலமைச்சரை வரவேற்க வேறு எந்த அமைச்சரும் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் வரவேண்டாம் ஈரோட்டில் இறுதிக்கட்ட தேர்தல் பணிகளை கவனியுங்கள் என முதல்வர் தரப்பிலிருந்தே அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications