பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.. அரசு தரும் உதவி தெரியுமா? கோவை அதிகாரி குட்நியூஸ்
கோவை: கோவையில் பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தில் 161 பேருக்கு கோடிக்கணக்கில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தி தொழில் ரூ.10 லட்சம் முதலீட்டிலும், சேவை தொழில் ரூ.5 லட்சம் முதலீட்டிலும் தொழில் தொடங்கலாம். இதற்கு வயது வரம்பு இல்லை. கல்வி தகுதியும் தேவையில்லை. பொதுபிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் 15 சதவீதம் அளவுக்கும், கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் 25 சதவீதம் அளவுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
பலருக்கு தொழில் தொடங்கி ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு உரிய சரியான முயற்சிகளை எந்த சூழலிலும் கைவிடாதவர்கள் மட்டுமே ஜெயிக்கிறார்கள். சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகளை காரணம் காட்டாமல் இலக்கு நோக்கி பயணிக்க ரிஸ்க் எடுப்பவர்கள் வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆகிறார்கள். சரியான முறையில் முயற்சி செய்தால், வட்டியே இல்லாமல் பல லட்சம் கடன் பெற்று வெற்றிகரமாக தொழிலை நடத்தி, திரும்ப கடனை செலுத்தி மேலே வர முடியும். அதற்கு மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, மானிய உதவிகளை செய்கிறது.

சிறு, குறு தொழில் நிறுவனங்களை துவக்குவோர், அதற்காக ஜிஎஸ்டி பதிவு செய்து, தொழிலை வெற்றிகரமாக கொண்டு சென்றால், எளிதாக அரசின் கடன் உதவிகளை பெற்று மேலே வர முடியும். தமிழ்நாட்டில் அப்படி தொழில் வாய்ப்புகளை கண்டுபிடித்து, தொழில்களை அதிகம் உருவாக்கி வெற்றி பெற்றவர்கள் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் உள்ளனர்.
அதில் குறிப்பாக சொல்வது என்றால், கோவை,ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களை சொல்லலாம். கோவையை பொறுத்தவரை, படித்தவர்கள் உடனேவேலைக்கு செல்வதை விட சொந்த தொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கான வழிகாட்டுதல்களும் சரி, வழிகளும் சரி அங்கு கோவையில் அதிகமாகவே உள்ளது. கோவையில் உள்ளவர்கள், தொழில் தொடங்கி முன்னேற மத்திய மாநில அரசுகள் உதவிகள், திட்டங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை சரியாக அடையாளம் காண்கிறார்கள்.. அப்படி அடையாளம் கண்டு உழைத்தவர்கள் இன்று மிகப்பெரிய தொழில் அதிபர்களாக உள்ளனர்.
சரி விஷயத்திற்கு வருவோம்.. கோவையில் தொழில் தொடங்கி முன்னேற விரும்புவோருக்கு பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தில் கடன் உதவியுடன் அரசு மானியத்தையும் தருகிறது. இந்த மானியம் எப்படி இருக்கும் என்றால், நீங்கள் ஒரு7 லட்சம் கடன் வாங்கியிருக்கிறீர்கள் என்றால், வட்டியாக 3 லட்சம் வரை வரும். ஒட்டு மொத்தமாக 10 லட்சம் வரை நீங்கள் செலுத்த வேண்டியதிருக்கும். ஆனால் 7 லட்சம் செலுத்தினாலே போதும். அந்த 3 லட்சத்தை அரசு மானியமாக வழங்கிவிடும். நீங்கள் வாங்கிய பணத்தை மட்டும் சரியாக கட்டினாலே போதும். அடுத்த முறை இன்னும் கூடுதல் கடன் வாங்கி, அதற்கும் மானியம் பெற்று முன்னேற முடியும். இதில் பட்டியல் இனத்தவர்கள் உள்பட சிறப்பு பிரிவினருக்கு கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது.
இதுபற்றி கோவை மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் சண்முக சிவா கூறுகையில், கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 906 தொழில் நிறுவனங்கள் உதயம் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. (அதாவது 2.18லட்சம் நிறுவனங்கள் கோவையில் உள்ளன) கோவை மாவட்டத்தை பொறுத்தவரை புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி பெற்று கொடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி.) கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்க இந்த திட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். உற்பத்தி தொழில்களை ரூ.10 லட்சம் முதலீட்டிலும், சேவை தொழில்களை ரூ.5 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம். இதற்கு வயது வரம்பு இல்லை. கல்வி தகுதியும் தேவையில்லை.
மற்றொரு பிரிவில் உற்பத்தி தொழிலில் ரூ.50 லட்சம் முதலீட்டிலும், சேவை தொழிலில் ரூ.20 லட்சம் முதலீட்டிலும் தொழில் தொடங்க முடியும். இதற்கு குறைந்த பட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியம் ஆகும். பொது பிரிவினருக்கு 90 சதவீதம் அளவுக்கும், சிறப்பு பிரிவினருக்கு 95 சதவீதம் அளவுக்கும் வங்கி கடன் பெற்று தருகிறோம்.
இதில் பொதுபிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் 15 சதவீதம் அளவுக்கும், கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் 25 சதவீதம் அளவுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. சிறப்பு பிரிவினர் நகர்ப்புறங்களில் தொழில் தொடங்கினால் 25 சதவீதம் அளவுக்கும், கிராமப்புறங்களில் தொழில் தொடங்கினால் 35 சதவீதம் அளவுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் ரூ.3 லட்சத்துக்கு ஒரு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும். இதன்படி இந்த திட்டத்தில் கோவை மாவட்டத்தில் புதிதாக 161 பேர் என்ஜினீயரிங், தென்னை நார் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை தொடங்கி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு ரூ.4.75 கோடி அளவுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யு.ஒய். இ.ஜி.பி.) திட்டத்தில் வியாபாரம் தொடங்க மானியம் அளிக்கப்படுகிறது. இதன்படி இந்த திட்டத்தில் 46 பேருக்கு ரூ.78 லட்சத்து 35 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்) உற்பத்தி மற்றும் சேவை துறையில் தொழில்முனைவோரை உருவாக்குகிறது. இந்த திட்டத்தில் 22 பேருக்கு ரூ.2 கோடி அளவுக்கு மானியம் அளிக்கப்பட்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 31 பேருக்கு, ரூ.2 கோடியே 92 லட்சம் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.
-
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications