நிதியமைச்சரே நினைத்தாலும் ஒரு மாநிலத்திற்கான நிதி பங்கீட்டை மாற்ற முடியாது – ஹெச்.ராஜா

Subscribe to Oneindia Tamil

கோவை: நிதி அமைச்சரே நினைத்தாலும் ஒரு மாநிலத்திற்கு அதிகமாகவும் மற்றொரு மாநிலத்திற்கு குறைவாகவும் நிதி பங்கீடு செய்ய முடியாது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை, மக்கள் சேவை மையம் மற்றும் பி.எஸ்.சி ஹாஸ்பிடல் இணைந்து நடத்தும் நலம் இலவச மருத்துவ முகாம், ராமநாதபுரம் பகுதியில் நடந்தது. அந்த முகாமை பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா துவங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்னரே வானதி சீனிவாசன், இது போன்ற சேவைகளில் ஈடுபட்டு வந்தார்.

h raja coimbatore

பாரதிய ஜனதா இது போன்ற முகாம்களை மகளிர் அணி தலைவி சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்குப் பிறகும் அவர் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். கோவை பகுதியில் நகராட்சிகளில், ஒருபுறம் சாலை அமைத்துக் கொண்டு போனால், ஒருபுறம் வடிகால் அமைப்பவர்கள் தோண்டுகிறார்கள். அந்தப் பணிகள் முடிந்ததும், குடிநீர் குழாய்க்கு குழிகள் தோண்டப்படுகிறது. Orphant child மன நிலைமையில் கோவை மாநகராட்சியின் நிர்வாகம், பொறுப்பற்ற நிர்வாகமாக செயல்படுகிறது.

அதேபோல இன்று காலையில் கூட நான் ஒரு மருத்துவரை சந்தித்தேன், 2004- ல் அவருக்கு விதிக்கப்பட்ட வீட்டு வரி 2,400 ரூபாய், ஆனால் இன்று அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் நோட்டீஸில் 56,000 ரூபாய் கட்ட வேண்டும் என்று வந்து இருக்கிறது. இதுபோன்று அனைத்து வீடுகளுக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரே, நான் சொன்னால் கூட யாரும் கேட்பதில்லை என்று கூறுகிறார்.

அப்படி என்றால் இங்கு உள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு, உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு கட்டுப்பாடுகள் இல்லையா?, முதலமைச்சர் தான் தான் எல்லாமே என்று நினைத்து பேசிக் கொண்டு இருக்கிறார், இது அவருடைய கட்டுப்பாட்டில் இல்லையா ? கோயம்புத்தூரில் கொஞ்சம் கூட குடிமை வசதிகள் பற்றி கவலைப்படாது, தண்ணீர் வரி, குப்பை வரி போன்றவற்றை வசூல் செய்து கொள்கிறீர்கள்.

அனைவருக்கும் இலவச மின்சாரம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். பின்பு எதற்காக இவ்வளவு வீட்டு வரி வசூல் செய்கிறீர்கள் ? இது போன்று மக்களை கொள்ளை அடிக்கின்ற நிர்வாகமாக தி.மு.க அரசு தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. அரசியலே தெரியாமல் தான்தோன்றித் தனமாக, முன்தினம் முதல்வர் பேசி இருக்கிறார். எல்லா ஊர்களிலும் போராட்டம் நடத்தினார்கள் ஒன்றிய அரசு பணம் கொடுக்கவில்லை என்று.

உங்களுக்கு அரசியலமைப்பு பற்றி தெரிய வேண்டாமா ? நிதி அமைச்சகம் என்றால் என்ன ? அது எவ்வாறு செயல்படுகிறது? நிதி அமைச்சரே நினைத்தாலும் ஒரு மாநிலத்திற்கு பணத்தை கூட்டி கொடுக்கவோ குறைத்துக் கொடுக்கவோ முடியாது. ஜி.எஸ்.டி வரி வசூல் செய்யும் போதே, 50 சதவீதம் மத்திய மத்திய நிதியாகவும், 50 சதவீதம் மாநில TNGST யாகவும் வசூல் செய்யப்படுகிறது.

2006 ஆம் ஆண்டுக்கு பிறகு இலவச திட்டங்களை வழங்கி தி.மு.க அரசு தான் கடன் சுமையை அதிகமாக்க துவங்கியது. இவர்கள் செய்யும் ஊழலை நிறுத்தினாலே மக்களுக்கு பெரும் பயன் கிடைக்கும்.

திருமங்கலம் ஃபார்முலா என்ற ஒன்றை தி.மு.க உருவாக்கி அப்போது நடந்த இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஆனால் பொது தேர்தலில் தோல்வி அடைந்தது. அதேபோல் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் 2026 தேர்தலில் இந்த ஆட்சி வீட்டுக்கு போவதை யாரும் தடுக்க முடியாது" இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+