கோவை சுல்தான்பேட்டையில் டாக்டர் முத்துலட்சுமி.. இப்படியுமா.. விசாரித்த மக்களே நம்ப முடியாத ட்விஸ்ட்
கோவை: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஜே.கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் அருகே நேஹா என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை நடத்தி வந்த குமாரபாளையத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் நடத்தி வந்தார். அவரை பற்றி விசாரித்த அக்கம் பக்கத்தினருக்கும், நோயாளிகளுக்கும் இவர் டாக்டர் தானா என்ற சந்தேகம் எழுந்தது.போலி டாக்டராக இருப்பாரோ என்று சந்தேகத்தில் ரகசிய தகவல் தந்தனர். விசாரித்த அதிகாரிகளுக்கு முத்துலட்சுமி போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இப்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
இன்றைக்கு சில நர்ஸிங் படித்தவர்கள், கம்பவுண்டர்கள், 12ம் வகுப்பு படித்தவர்கள், 10ம் வகுப்பு படித்தவர்கள் டாக்டர் என்று பொய் சொல்லி ஊருக்குள் கிளினிக் நடத்துகிறார்கள். இவர்கள் டாக்டர் தானா என்பதை அறிவது சாமானிய மக்களுக்கு சவாலானது.

இதன் காரணமாக அந்தந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ரெய்டு நடத்தி போலி டாக்டர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைப்பார்கள். சில நேரங்களில் பொதுமக்களின் தகவல் அடிப்படையில் சோதனை நடத்தியும் போலி டாக்டர்களை கைது செய்வார்கள். அப்படித்தான் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் ஒரு போலி பெண் டாக்டர் கைதாகி உள்ளார்.
சுல்தான்பேட்டையில் கிளினிக்
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஜே.கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப்பில், நேஹா என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த முத்துலட்சுமி(வயது 56) என்பவர் தன்னை டாக்டர் என கூறிக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். ஆனால் அவர் டாக்டர் இல்லை என்றும், கிளினிக் நடத்தி நோயாளிகளை ஏமாற்றி வருகிறார் என்றும் புகார் எழுந்தது.
அதிகாரிகள் ஆய்வு
அதன்பேரில் கோவை மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் உத்தரவின்பேரில் சூலூர் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் கஜேந்திரன், ஆய்வுக்குழுவை சேர்ந்த அலுவலக கண்காணிப்பாளர் குமரவேல், அலுவலக உதவியாளர் மணிகண்டன், செவிலியர் மதி ராமலட்சுமி, ஜே.கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீரென அந்த கிளினிக்குக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்
போலி டாக்டர்
இந்த ஆய்வில் முத்துலட்சுமி மருத்துவம் படிக்காதவர் என்பதும் நர்சிங் மட்டும் படித்துவிட்டு, அதில் கிடைத்த அனுபவத்தை கொண்டு கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்த ஊசி, மருந்து உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிளினிக்கை மூடினார்கள்
மேலும் கிளினிக்கை இழுத்து மூடினர். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசிலும் புகார் அளித்தனர். அதன்பேரில் சுல்தான்பேட்டை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துலட்சுமியை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications