மனைவியுடன் தகராறு.. முத்தான இரு பிள்ளைகளின் கழுத்தை நெரித்த கணவன்.. கோவையில் அதிர்ச்சி
கோவை: கோவையில் குடும்பத் தகராறு காரணமாக இரு மகள்களை கொலை செய்து விட்டு தந்தை தலைமறைவாகிவிட்டார்.
கோவை மசக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வராணி- பத்பநாபன் தம்பதியினர். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஹேமா வர்ஷினி (15), ஸ்ரீஜா (10) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

குடும்பச் சண்டை
இந்த நிலையில் கணவன்- மனைவிக்குள் கடந்த 2 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து தகவல் தெரிவித்து போலீஸார் நேற்றிரவு அவர்களது வீட்டிற்கு வந்து பேசி சமரசம் செய்து கொள்ள கூறினர்.

தன்னுடன் இருக்க
பின்னர் செல்வராணி வெள்ளலூர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் பத்மநாபன் இரு குழந்தைகளுடன் வீட்டிலேயே தங்கிவிட்டார். குழந்தைகளை அனுப்புமாறு செல்வராணி கேட்டதற்கு அவர்கள் தன்னுடன் இருக்கட்டும் என பத்மநாபன் கூறிவிட்டார்.

போலீஸுக்கு தகவல்
இந்த நிலையில் காலை வீட்டுக்கு வந்து பார்க்கும்போது இரண்டு பெண் குழந்தைகளும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் செல்வராணி. பின்னர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

பரபரப்பு
போலீஸார் விசாரணையில் இரு மகள்களையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிங்காநல்லூர காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications