Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ATM Franchise வைத்து தருவதாக கோடிக்கணக்கில் மோசடி.. கோவையை அதிரவைத்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் ATM Franchise வைத்து தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி கோவை மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இன்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவையில் Zpe எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை துரைசாமி அங்கமுத்து, ரம்யா துரைசாமி, தமிழ்மணி ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் White Label ATM Franchise குறித்து சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளனர். இதனைப் பார்த்து கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கேரளா, கர்நாடகா மாநிலம் என பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இந்நிறுவனத்தினரை தொடர்பு கொண்டுள்ளனர்.

Kovai scam

அப்போது, அவர்களை கோவை அவிநாசி சாலை நவஇந்தியா பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வருமாறு அந்நிறுவனத்தைச் சேர்ந்தோர் கூறியுள்ளனர். அங்கு சென்ற பிறகு ஏடிஎம் இயந்திரங்களை பிரான்சைஸ் ஆக வைத்துக் கொடுப்பதகாவும், அந்த இயந்திரத்தில் வங்கிகளின் ஏடிஎம் கார்டுகளைக் கொண்டு பணம் எடுக்கலாம், Gpay போன்றவற்றின் மூலமும் பணத்தை ஆன்லைனில் செலுத்தி விட்டு பணமாக எடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.

இதுபோன்ற தங்களிடம் பல்வேறு ஸ்கீம்கள் உள்ளதாகவும், முதலீடுக்குத் தகுந்தாற்போல் வருமானமும், கமிஷனும் கிடைக்கும் என்றும், ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் அந்த இயந்திரம் மூலமாக பணப் பரிவர்த்தனை செய்யும்போது அதற்குத் தகுந்தாற்போல் கமிஷன் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

இதனை நம்பி ஏராளமானோர் 50 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். 45 நாட்களில் இயந்திரங்கள் ஒப்படைக்கப்படும் அதன் பின்னர் நாங்களே பணத்தை அதில் லோட் செய்து விடுவோம். பிறகு மாதமாதம் கமிஷன், வருமானம் ஆகிய பணத்தை கொடுத்து விடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

முதலீடு செய்த சிலருக்கு முதலில் அந்த ATM இயந்திரங்களைக் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த இயந்திரங்கள் ஓரிரு வாரம் மட்டுமே வேலை செய்துள்ளன. அதன் பிறகு அந்த இயந்திரம் வேலை செய்யவில்லையாம். இது குறித்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது சில அப்டேஷன்கள் செய்து கொண்டிருப்பதாக பதில் கூறியுள்ளனர்.

மேலும், பணம் முதலீடு செய்த பலருக்கும் அந்த இயந்திரத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதுகுறித்து கேட்டால் ஏதேதோ காரணங்களை சொல்லி தட்டிக் கழித்து வந்ததாகவும், எனவே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தற்போது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், இதனை நம்பி நூற்றுக்கணக்கானோர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், எனவே தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், தற்போது அந்த நிறுவனம் மூடப்பட்டு இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த அவர்கள் அந்த நிறுவனத்தின் துவக்க விழாவில் சைலேந்திரபாபு உட்பட பல்வேறு பிரபலமானவர்கள் கலந்து கொண்டதாகவும் அவர்களை எல்லாம் பார்த்து அதனை நம்பி தான் முதலீடு செய்து ஏமாந்து விட்டதாக வேதனை தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+