சொல்லி அடிக்கும் மிதுன ராசி.. ஓராண்டுக்கு உங்களை யாரும் அசைக்க முடியாது.. இந்த விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

ஆனி மாத ராசி பலன் 2026: ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த ஆனி மாதத்தில் மிதுன ராசியினருக்கான அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஆனி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் நடைபெறுகின்றன. மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. மேலும், புதன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பத்ர ராஜயோகமும் அமைகிறது.

aani-month-horoscope-2026-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-people-during-this-month

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், மிதுன ராசியினருக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்த ஆனி மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கவுள்ள பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்கு சூரியன் வரக்கூடிய மாதமே ஆனி மாதம். உறவினர்களுடன் தகராறுகள் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்குவதைத் தவிர்ப்பது நல்லது. இந்த ஆனி மாதம் உங்களுக்கு நிறைய யோகங்கள் கிடைக்கும். எல்லா விஷயத்திலும் ஏற்றம் கிடைக்கும். மேலதிகாரிகள், சக ஊழியர்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது மேன்மையைத் தரும்.

கவனம்

சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் பழகுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆவணங்களில் கையெழுத்து போடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு, இருமுறை படித்துப் பார்த்துவிட்டு போடுவது நல்லது. யாருக்காகவும் முன் நிற்பது, ஜாமீன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தொடர்ச்சியாக இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். 10 ஆம் இடத்தை குரு பார்ப்பது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும்.

ராஜயோகம்

ஓராண்டுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றமும், ராஜ கெளரவமும் உண்டாகும். நிறைய நல்லவை செய்வீர்கள். அடுத்தடுத்து நிறைய நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி ஏற்படும். யோசித்துக் கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். மன அழுத்தம் தீரும். ஆரோக்கியத்தை பரிசீலித்துக் கொள்வது நல்லது.

வழிபாடு

உத்தியோகத்தில் புதிய நல்ல விஷயங்கள் ஏற்படும். பதவி உயர்வுத் தடை, சம்பள உயர்வுத் தடை என அனைத்து விதமான தடைகளும் தவிடு பொடியாகும் நல்ல காலகட்டம். தினந்தோறும் அனுமன் வழிபாடு செய்வது, அனுமன் சாலிஷா கேட்பது சகலவித முன்னேற்றங்களையும் அள்ளிக் கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஆரோக்கியம்

நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கண் வலி, தலைவலி, மயக்கம், தலை சுற்றல், குறை ரத்த அழுத்தம், ஹார்மோன் குறைபாடு, தோல் அலர்ஜி போன்ற உடல் பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+