பாலக்காடு பஸ்ஸில் பல கோடி தங்கம்.. கோவை வாளையாறு சோதனை சாவடியில் ட்விஸ்ட்.. என்ன நடந்தது?
கோவை: கோவையில் பாலக்காடு செல்லும் சாலையில் உள்ளது வாளையாறு சோதனை சாவடி.. வாளையாறுதான் தமிழ்நாடு கேரளாவை இணைக்கும் இடம் ஆகும். வாளையாறு தாண்டினால் உடனே பாலக்காடு வந்துவிடும். இதுதான் கேரள மக்களின் இதயம் போன்ற நுழைவு வாயிலாகும். கேரளாவின் அனைத்து ரயில்களும், பெரும்பாலான போக்குவரத்தும் இந்த வழித்தடத்தில் தான் செல்கின்றன இந்நிலையில் சிலர் இந்த சாலையில் கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபட்டு சிக்குகிறார்கள். கேரளாவில் இருந்து கோவைக்கு பஸ்சில் கடத்திய ரூ.9¼ கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டையும் கேரளாவையும் இணைக்கும் முக்கியமான இடம் என்றால் அது பாலக்காடு அருகே உள்ள வாளையாறு செக் போஸ்ட் தான். லாரி டிரைவர்கள், ஆம்னி பேருந்துகள், மணல் லாரிகள், சரக்கு லாரிகள் என எல்லாருக்குமே மிகமிக முக்கியமான இடம் என்றால் அது வாளையாறு செக்போஸ்ட் தான். இந்த சோதனை சாவடியை கடக்காமல் கேரளாவிற்கு நுழைவது கடினம்.இங்கு எப்போதுமே சோதனைகள் பலமாக இருக்கும்.

வாளையாறு சோதனை சாவடி
கேரளாவில் இருந்து தமிழகம் வந்தாலும், தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்றாலும் சோதனையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். சந்தேகத்திற்கு உரிய அனைத்து வாகனங்களையும் ஆய்வுக்கு பின்னரே அதிகாரிகள் மாநிலங்களுக்குள் அனுமதிப்பார்கள்.முன்பு ஜிஎஸ்டி இல்லை என்று இருந்தது. ஆனால் இப்போது ஜிஎஸ்டி இருப்பதால் ஜிஎஸ்டிக்கான சோதனைகள் இல்லை.. மாறாக சட்டவிரோத செயல்களை தடுக்கும் புரட்டும், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் பொருட்டே சோதனைகள் நடக்கிறது.
பஸ்ஸில் 6 கிலோ தங்க கட்டிகள்
அந்த வகையில், கோவை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட வாளையாறு சோதனை சாவடி வழியாக கேரள பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி ஒரு பேருந்து வந்தது. அந்த பஸ்சில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பேருந்தில் இருந்த ஒரு பயணி வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்து பார்த்தார்கள். அதில், அந்த பயணி 6 கிலோ 140 கிராம் தங்கக்கட்டிகளை மறைத்து கேரளாவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.
கேரளா வியாபாரி
கோவை மாவட்ட போலீசாரின் தொடர் விசாரணையில், தங்கக்கட்டிகள் கடத்தி வந்த அந்த நபர், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த நிபின் (வயது 29) என்பதும், அவர் பணிபுரிந்து வரும் துணிக்கடையின் உரிமையாளரான ரஹ்மான் என்பவர் கோவை உக்கடத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ஒப்படைப்பதற்காக கொடுத்து அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.
9 கோடி மதிப்பு என தகவல்
இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ.9 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வாலிபர் நிபினிடம் விசாரித்து வருகிறார்கள். முறையாக கணக்கு காட்டினால் மட்டுமே வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கத்தை கேரள வியாபாரியிடம் ஒப்படைப்பார்கள். விசாரணை நடந்து வருகிறது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications