குருவாயூர் கோவிலில் தங்கம், வெள்ளி நகைகள் விஷயத்தில் குளறுபடியா.. தேவஸ்தான தலைவர் விளக்கம்
கோவை: கேரளாவின் திருச்சூரில் உள்ள புகழ் பெற்ற குருவாயூர் கோவிலில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்த்து. 40 ஆண்டுகளாக தணிக்கை செய்யப்படவில்லை என்றும் சிலர் குற்றச்சாட்டுகளை கிளப்பினார்கள். சபரிமலை போல் இங்கும் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தது. ஆனால் சமூக ஊடகங்களில் பரவும் இந்த புகார் அடிப்படை ஆதாரம் அற்றது. தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குருவாயூர் தேவஸ்தான தலைவர் விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சபரிமலையில் பல கோடிமதிப்புள்ள தங்க நகைகள் சிலையில் குறைந்துள்ளதாக முறைகேடு புகார் எழுந்துள்ளது.இந்த விவகாரம் கேரளாவையே உலுக்கி உள்ளது. அந்த பிரச்சனை முடிவதற்குள், அடுத்ததாக கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உள்ள புகழ் பெற்ற கிருஷ்ணன் கோவில் மீது புகார்களை சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

உலகப்புகழ் பெற்ற இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, பாத்திரங்கள் போன்ற பொருட்களுக்கான ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் சிலர் குற்றம்சாட்டினார்கள். இதனால் சபரிமலை போல், குருவாயூரும் கேரளாவில் அண்மைக்காலமாக அதிமாக விமர்சிக்கப்படுகிறது.
சர்ச்சைகள் அதிமான நிலையில், குருவாயூர் தேவஸ்தான தலைவர் விஜயன், சமூக ஊடகங்களில் பரவும் இந்த புகார் அடிப்படை ஆதாரம் அற்றது. தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "திருச்சூர் மாவட்டம் குருவாயூர் கோவிலில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. முறைகேடுகள் நடந்ததாக எழுந்த தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் இல்லை. முறைகேடுகள் நடைபெற்றதாக பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தும் முறைப்படி பதிவு செய்யப்பட்டு, அதற்கான ஆவணங்கள் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் குருவாயூர் தேவஸ்தான தலைவர் விஜயன் தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது:- குருவாயூர் கோவிலில் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் எந்த குளறுபடியும் கிடையாது. கோவில் பதிவேடு முறையாக வைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து வெளிவரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். கடந்த 2019-20-ம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் குருவாயூர் கோவிலில் 522 கிலோ யானை தந்தங்கள் காணவில்லை என்று கூறப்பட்டு உள்ளது தவறான தகவல் ஆகும்.
அறிக்கையின் படி, தேவஸ்தானம் முன்னிலையில் யானை தந்தங்களை வனத்துறையினர் வெட்டி எடுத்து சென்றனர். அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மேலும் தங்க, வெள்ளி பொருட்கள் பாதுகாப்பாக லாக்கரில் வைக்கப்பட்டு உள்ளது. தேவஸ்தானத்துக்கு சொந்தமான தங்கம் கட்டிகளாக மாற்றப்பட்டு, மும்பையில் உள்ள ஸ்டேட் வங்கியில் தங்க முதலீடு திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தவறான தகவல்களை பரப்புகிறவர்கள் மீத மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் புகார் அளிக்கப்படும்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications