அரசு வேலைக்கான போட்டி தேர்வு எழுத போறீங்களா? தமிழக அரசின் ஸ்வீட் சர்ப்ரைஸ்.. அசத்தல் யோசனை
கோவை: திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
சமீபத்தில்தான் கோவையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் பிரம்மாண்ட அறிவு மையம் அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. அங்கே அமைப்பதற்கு 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

திருச்சி, கோவையில் அடுத்தடுத்து பிரம்மாண்ட திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஏற்கனவே மதுரையில் கலைஞர் நூலகம் உள்ள நிலையில் சென்னையில் அண்ணா நூலகம் உள்ள நிலையில் திருச்சி, கோவையில் அடுத்தடுத்து பிரம்மாண்ட நூலகங்கள் கொண்டு வரப்படுகின்றன.
என்ன காரணம்?: அரசு போட்டி தேர்வுகளை எழுதும் நபர்கள் எளிதாக படிக்க வசதியாக இந்த நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் அதிக அளவில் மக்கள் இந்த தேர்வுகளுக்கு படிக்க முடியும் . அவர்கள் படிக்க வசதியாக இந்த நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அடுத்தடுத்து நடக்கும் தேர்வுகள்: தமிழ்நாட்டில் அடுத்த 2 வருடங்களில் நிரப்பப்படும் அரசு வேலைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அதன்படி தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி உட்பட பல்வேறு தேர்வுகள் மூலம் 70 ஆயிரம் கூடுதல் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது போக மற்ற தேர்வுகள் மூலம் 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உள்ளன. 2026 ஜனவரிக்குள் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன.
குரூப் தேர்வு மட்டுமின்றி பல தேர்வுகள் மூலம் நிறைய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து குரூப் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் நடக்கும் குரூப் தேர்வுகள் மூலம் மேற்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதன்படி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
இந்த தேர்வுக்கு ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள் ஆகும். 2327 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.
மற்ற தேர்வுகள்: கடந்த வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications