கோவையில் நடுரோட்டில்.. ஒரு நிமிடம் மனம் தடுமாறிய போலீஸ் ஏட்டு.. மறக்க முடியாத பரிசு
கோவை: கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் பொங்கல் பண்டிகையை ஒட்டி பொருட்கள் வாங்கியவர் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அங்கு போலீஸ் ஏட்டு பைக்கில் வந்ததால் நடுரோட்டில் நின்றார்.. இதனால் திடீரென நின்ற போலீஸ் ஏட்டு மோகன்ராஜ் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். போலீஸ் ஏட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த 30 வயதாகும் மோகன்ராஜ் என்பவர் கோவை நல்லாம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மோகன்ராஜ் தான் வேலை செய்து வரும் நிறுவனத்தில் பொங்கல் விழா கொண்டாட தயார் செய்து கொண்டிருந்தார். பொங்கல் கொண்டாட தேவையான பொருட்கள் வாங்க நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள கடைக்கு சென்றிருக்கிறார்.

பின்னர் பொருட்கள் வாங்கி முடித்த பின்னர் தனது நிறுவனத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மோகன்ராஜ் அந்தப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். சாலையில் இருசக்கர வாகனங்கள் அதிகமாக வந்து கொண்டு இருந்ததால் அதை கவனித்தபடி சாலையை கடக்க முயன்றிருக்கிறார்.
அப்போது அவர் சாலையின் நடுவே வந்தபோது போலீஸ் ஏட்டு ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அதை கவனித்த மோகன்ராஜ், சாலையின் நடுவில் அப்படியே நின்றுவிட்டார். அவர் அருகே வந்த போது திடீரென்று காவல் ஏட்டு மோகன்ராஜ் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். ஒரு நிமிடம் அவசரப்பட்டு கை நீட்டிய ஏட்டு மோகன்ராஜ், மோட்டார் சைக்கிளில் சென்றார். இந்த காட்சி அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதை பார்த்த பலர் மோகன்ராஜின் கன்னத்தில் அறைந்த போலீஸ் ஏட்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்த விவகாரம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் அந்த போலீஸ் ஏட்டு யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதில் அவர் கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் ஜெயப்பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சரவணசுந்தரின் உத்தரவிட்டார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications