அடிச்சு தூக்கும் கொங்கு மண்டலம்.. அதிக வாக்குப்பதிவு நடந்த மாவட்டங்களில் டாப் 3 லிஸ்ட் பார்த்தீங்களா
கோவை: கொங்கு மண்டலத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் இந்த முறை வாக்குப்பதிவு அதிகமாக நடந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளதில் டாப் இடங்களை மேற்கு மாவட்டங்களே பிடித்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், திரைப்பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குகள் பதிவாகி இருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி, வாக்குப்பதிவு 56.81 சதவீதமாக அதிகரித்தது.இந்த வாக்குப்பதிவு சதவீதம் மதியம் 3 மணிக்கு 70 சதவீதமாக உயர்ந்தது.
இன்று மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை சுமார் 4 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர். 2021 தேர்தலில் 3 மணிக்கு 53.35 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்படி 2026 தேர்தலில் கூடுதலாக 3 மணியளவில், 16.65 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். தமிழ்நாட்டில் அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளதில் டாப் 5 இடங்களையும் மேற்கு மாவட்டங்களே பிடித்துள்ளன. கொங்கு மண்டத்தில் அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் 76.43%, கரூர் மாவட்டத்தில் 76.08%, சேலம் மாவட்டத்தில் 75.79%, ஈரோடு மாவட்டத்தில் 75.61%, திருப்பூர் மாவட்டத்தில் 75.38% வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக வாக்குப்பதிவு நடந்துள்ள மாவட்டங்களில் முதல் 5 இடங்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவை தான். கோவை மாவட்டத்தில் 71.16% வாக்குப்பதிவு நடந்திருந்தது.
மாலை 5 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் 87.63%, கரூர் மாவட்டத்தில் 89.32%, சேலம் மாவட்டத்தில் 88.02%, ஈரோடு மாவட்டத்தில் 87.59%, தருமபுரி மாவட்டத்தில் 87.28%, திருப்பூர் மாவட்டத்தில் 86.33% வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக வாக்குப்பதிவு நடந்துள்ள மாவட்டங்களில் முதல் 3 இடங்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவை தான். கோவை மாவட்டத்தில் 82.33% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, அதிக வாக்குப்பதிவு நடைபெற்ற மாவட்டங்கள், கரூர், அரியலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் தான். இந்நிலையில், கொங்கு மண்டல மாவட்டங்கள் அனைத்திலும் தற்போது வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications