"நான் அப்படித்தான்".. பிடிவாதம் பிடித்த கவிதா.. ஒரே போடாக போட்ட குமார்.. 12 வருஷ பந்தம் காலி!
மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்
கோவை: போன் அடிக்கடி பேசாதே என்று எவ்வளளோ சொல்லியும் கவிதா கேட்கவில்லை.. தொடர்ந்து யாரோ ஒருவருடன் பேசி கொண்டே இருந்தார்.. இதனால் மட்டையை எடுத்து ஒரே போடாக போட்டு கொன்றேவிட்டார் கணவர்!
கோவை காந்தி மாநகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா.. இவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. ஆனால், கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு, அவரை விட்டு பிரிந்து, மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார்..
அதனால், அதே பகுதியில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.. அப்போது குமார் என்கிற லவேந்திரனை 2வது கல்யாணம் செய்து கொண்டார்.. குமார் ஒரு இலங்கை அகதி.

மனைவி
இவர்களின் கல்யாணம் 12 வருஷத்தக்கு முன்பு நடந்தது.. இப்போது கவிதாவுக்கு 32 வயதாகிறது.. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.. அதே பகுதியில் பழைய கட்டிடங்களை உடைக்கும் வேலையை குமார் செய்து வருகிறார். இந்நிலையில் கவிதா அடிக்கடி யாருடனோ போனில் பேசி கொண்டே இருந்துள்ளார்.. இதை பலமுறை குமார் பார்த்துவிட்டு, மனைவியை கண்டித்துள்ளார்.. ஆனாலும் கவிதா கேட்கவில்லை.

தம்பதி
இதுவே தம்பதிக்குள் தகராறாக உருவெடுத்தது.. தன்னால் போன் பேசாமல் இருக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்ட கவிதா, கோபித்து கொண்டு நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.. நண்பனின் வீட்டில் சென்று கவிதா தங்கியதால், குமாருக்கு மேலும் கோபம் வந்துவிட்டது... இந்நிலையில் மறுபடியும் கவிதா வீட்டிற்கு வந்துள்ளார்..

ஆத்திரம்
அப்போதுதான், குமாருக்கும் கவிதாவுக்கும் பிரச்சனை மீண்டும் வெடித்தது.. இரவெல்லாம் சண்டை போட்டு கொண்டனர்.. இறுதியில் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்த குமார், மகன் விளையாட வைத்திருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து கவிதாவின் மண்டையிலேயே அடித்து விட்டார். கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.. ஆனால் அதற்குள் கவிதாவின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

கைது
ஆட்களை பார்த்ததும் குமாரும் தப்பியோடிவிட்டார்.. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளிக்கவும், குமாரை தேட ஆரம்பித்தனர்.. அப்போதுதான், ஆலாந்துறை அருகே உள்ள பூலுவப்பட்டி பகுதியில் உள்ள அகாதி முகாமில் குமார் பதுங்கியிருந்தார்.. அங்கேயே குமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications