1.7 டன் எடைகொரோனா நிவாரண பொருட்களுடன் கோவை டூ லட்சத்தீவுகள் பறந்த இந்திய விமான படை விமானம்
கோவை: கோவையிலிருந்து 1.7 டன் எடை கொண்ட கொரோனா நிவாரண பொருட்களை லட்சத்தீவுகளுக்கு இந்திய விமான படையின் விமானம் கொண்டு சேர்த்தது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால் பல இடங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட கொரோனா நிவாரண பொருட்களை இந்தியா வேறு நாடுகளுக்கு அனுப்புவதும், தேவைப்படில் வேறு நாடுகளிலிருந்து இந்தியா பெறுவதும் உள்ளது.
அந்த வகையில் லட்சத்தீவில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் உள்ளஇட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த யூனியன் பிரதேச அரசுக்கு உதவ இந்தியா முன் வந்தது.
Indian Airforce airlifted 1.7 tons of #COVID19 relief materials including Oxygen Concentrators from Sulur AFS, Coimbatore to Agatti, Lakshadweep, today.@pibchennai @IAF_MCC @ROBCHENNAI_MIB @DDNewsChennai @airnews_Chennai pic.twitter.com/huu2g1Ooxf
— Defence PRO Chennai (@Def_PRO_Chennai) May 9, 2021
அதன்படி இந்திய விமான படைக்குச் சொந்தமான விமானத்தில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் உள்பட கொரோனா நிவாரண பொருட்களை கோவையிலிருந்து இந்தியா அனுப்பி வைத்தது. இந்த நிவாரண பொருட்கள் அகாட்டியில் உள்ள விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.












Click it and Unblock the Notifications