தேர்தலுக்கு முன்பு செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்தால்.. அண்ணாமலைக்கு கடும் சவால்
கோவை: உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற உள்ளது. ஒருவேளை தேர்தலுக்கு முன்பு செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்தால், கோவையில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை நீதிமன்றம் பலமுறை தள்ளுபடி செய்துவிட்டது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில். சென்னை உயர்நீதிமன்றமும் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அவருக்கு எதிரான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்தநிலையில் செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் ராம்சங்கர், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மனுதாரர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 280 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதனிடைய நாள்தோறும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரருக்கு எதிரான உண்மையான ஆதாரங்கள் இல்லை.
மனுதாரருக்கு எதிராக அமலாக்கத்துறை தெரிவிக்கும் பண மோசடி ஒரு கோடியே நான்கு லட்சமாகும். ஆனால் மனுதாரரின் ஊதியமோ 75 லட்சமாகும். இத்துடன் பைபாஸ் சிகிச்சைக்கு பின் மனுதாரர் உடல் பரிசோதனை நாள்தோறும் செய்து வருகிறார். ஜாமீனுக்கான எந்த ஒரு நிபந்தனையும் ஏற்க தயாராக உள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயார்.. எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 1-ந்தேதி விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அன்றைய தினம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தால், அடுத்த ஓரிரு நாளில் வெளியே வருவார்.. அப்படி வந்தால் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்தால், கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு ஊக்கமாக இருக்கும் என்று திமுகவினர் நம்புகிறார்கள்..
அண்ணாமலைக்கு ஏற்கனவே கடும் சவாலான இரண்டு பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் எஸ்பி வேலுமணியின் தீவிர ஆதரவாளரான சிங்கை ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். மறுபக்கம் திமுக சார்பில் முன்னாள் அதிமுக மேயரான கணபதி ராஜ்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் கோவை தொகுதி மிகவும் கவனிக்கப்படும் விஐபி தொகுதியாக மாறி உள்ளது.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications