கோவையில் குப்பையை சாலையில் வீசினால்.. கேமராவில் பார்க்கும் அதிகாரிகள்.. வீட்டிற்கே வரும் அபராதம்
கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அவற்றை ஆர்.எஸ் புரத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கின்றனர். திறந்தவெளி குப்பை கொட்டுவோர் யார் ? எந்தெந்த பகுதியில் இருந்து வருகின்றனர். அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் செல்வதில்லையா ? தொழிலாளர்கள் சென்றாலும் சாலையில் வந்து குப்பையை போடுவது ஏன் என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள். மேலும் அபராதமும் விதிக்கிறார்கள்.
கோயம்புத்தூர் மாநகராட்சியானது சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாகும். கோவை மாநகரம் சென்னைக்கு அடுத்தபடியாக மிக வேகமாக வளரும் நகரமாகவும் இருக்கிறது. கேரளாவின் நுழைவு வாயிலாக உள்ள கோவை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குளுகுளு நகரம் ஆகும். இந்த நகரம் ஒரு காலத்தில் ஏராளமான மரங்களுடன் மிக அழகாக இருந்தது. ஆனால் இன்றைக்கு சாலை விரிவாக்கம் காரணமாக பல சாலைகளில் மரங்களே இல்லை.. நகரமோ மிகப்பெரியதாகிவிட்டது. வாகன நெருக்கடி கடுமையாக உள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு சிரமம்
கோவையை பொறுத்தவரை குப்பைகளும் பெரிய பிரச்சனையாக உள்ளது- கண்ட இடங்களில் குப்பைகளை மக்கள் கொட்டுவதால், தூய்மைபணியாளர்கள் சிரமத்தை சந்திக்கிறார்கள். இத்தனைக்கும் வீட்டிற்கே வந்து தான் குப்பைகளை வாங்குகிறார்கள்.ஆனாலும் சாலையில் குப்பைகள் வீசுவது தொடர்கிறது.
கோவை மாநகராட்சி குப்பைகள்
கோவை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. 100 வார்டுகளும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 20 வார்டுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் மண்டல வாரியாக நடக்கின்றன. கோவை மாநகராட்சியில் சுமார் 7000 க்கும் மேற்பட்ட சாலைகள் இருக்கின்றன. இங்கு உள்ள மகளிடம் தினமும் பல டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அப்படி கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பையை ஏற்றி செல்வதற்காக 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் சென்று தூய்மை பணியாளர்கள் குப்பைகளை வாங்குகிறார்கள். ஆனாலும் குப்பைகள் சாலைகளில் வீசப்படுகிறது. திறந்தவெளிகளில் வீசப்படுகிறது.
திறந்தவெளியில் கொட்டினால் அபராதம்
இதையடுத்து இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை கோவை மாநகராட்சி எடுத்துள்ளது. அந்த வகையில் திறந்தவெளி குப்பை கொட்டுவோர் யார் ? எந்தெந்த பகுதியில் இருந்து வருகின்றனர். அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் செல்வதில்லையா ? தொழிலாளர்கள் சென்றாலும் சாலையில் வந்து குப்பையை போடுவது ஏன் ? என கண்காணித்து ஆய்வு நடத்துகின்றனர்.
எச்சரிக்கை நோட்டீஸ்
பின் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மூலமாக சம்பந்தப்பட்டோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அதே தவறை செய்வதால், அபராதம் விதிக்கப்படும் என்கின்ற எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படுகிறது. கோவை வ.உ.சி மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தை சுற்றி உள்ள வணிக வளாக கடைகள் சிலவற்றில் சேகாரமாகும் குப்பையை ஓரிடத்தில் சேகரித்து வைக்காததால் பரவி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
5000 அபராதம் விதிப்பு
அந்த நிறுவனத்தினருக்கு மாநகராட்சி சார்பில் வழங்கிய நோட்டீஸில் உங்கள் வணிக நிறுவனத்தின் முன் இரவு நேரங்களில் குப்பையை பெருக்கி வெளியே சிதறி கிடப்பதற்கு புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரம் இருக்கிறது. அவற்றை அகற்றி ஒரு பையில் சேகரித்து உங்கள் வளாகத்தில் முன் ஓரத்தில் வைக்க வேண்டும். இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் முதல் முறை என்றால் ரூபாய் 500, இரண்டாவது முறை என்றால் ரூபாய் 1500, மூன்றாவது முறை என்றால் ரூபாய் 5,000 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications