கோவையில் பிரபல மருத்துவமனையில் நடந்த ஐடி ரெய்டு.. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்?
கோவை: கோவையில தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பிரபல மருத்துவமனை ஒன்றில் ஐடி ரெய்டு நடந்தது.. இதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில், பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு தொகுதிகளல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2-ந் தேதி சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் தென்காசி, திருப்பூர், செய்யாறு ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், பணம் பதுக்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து வருமான வரித்துறையினர் நேற்று மீண்டும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்..
இந்நிலையில் கோவையில் ஒரே குழுமத்தின் மருத்துவமனைகள் சரவணம்பட்டி மற்றும் சிங்கநல்லூரில் செயல்படுகிறது. இதேபோல் மதுக்கரையில் செட்டிபாளையம் பிரிவில் இந்த குழுமத்திற்கு நர்சிங் கல்லூரி ஒன்றும் நடத்தி வருகிறார். இந்த கல்லூரி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்ட கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் ஏராளமான பணம் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையில் 15 பேர் கொண்ட அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அந்த மருத்துவமனை உரிமையாளரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனை குழும்மத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டுக்கட்டமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் எவ்வளவு என்பது குறித்து வருமான வரித்துறை விவரங்களை வெளியிடவில்லை.. இதுகுறித்து வருமான வரித்துறையிடம் தேர்தல் ஆணையம் பல்வேறு விவரங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட பணம் மருத்துவ சேவை மூலம் வந்ததா? அல்லது வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கி வைக்கப்பட்ட பணமா என்று விசாரித்து வருகிறார்கள். ஐடி ரெய்டு நடந்த மருத்துவமனையை நடத்தி வருபவர் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த எழும்பியல் டாக்டர் ஆவார். இவரது மனைவியும் டாக்டர் ஆவார். இவரது மாமனார் ஓ பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.. இதனால் இங்கு நடந்த ஐடி ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications