ஈஷா ஹோம் ஸ்கூல் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.. சட்ட நடவடிக்கை எடுப்போம்.. ஈஷா அறிவிப்பு
கோவை: ஆந்திராவின் ராஜமுந்திரியைச் சேர்ந்த ஈஷா அறக்கட்டளையின் முன்னாள் தன்னார்வத் தொண்டர்கள் சத்ய நரேந்திர ரகானி மற்றும் யாமினி ரகானி ஆகியோர் ஈஷா குறித்து வைத்த புகார்களுக்கு ஈஷா மையம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகள் பாலியல் ரீதியாக தாக்கப்படுவதாக, பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஈஷா மையம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஈஷா நிர்வாகம் வெளியிட்டுள்ள மறுப்பில்,
1. ஈஷா ஹோம் ஸ்கூல் செயல்பாடுகளை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விரிவான ஆய்வுகளுக்கு பிறகு பாராட்டியுள்ளது.

2. ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக குற்றம் நடந்ததாக கூறும் அந்த நபர், அதற்கு பிறகு அவரின் மகனை எதற்காக தொடர்ந்து அதே பள்ளியில் 3 ஆண்டுகள் படிக்க வைக்க வேண்டும்.
3. அவரின் மகன் ஹோம் ஸ்கூலில் பள்ளி கல்வி முடித்து வெளியேறும் போது, பள்ளிக்கு தனது சிறப்பான மதிப்புரைகளை வழங்கி சென்றுள்ளார்.
4. அவரின் மகன் ஈஷா ஹோம் ஸ்கூல் கல்வியை முடித்து வெளியேறிய பின்னர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அதே பள்ளியில் அவரும் பணியாற்றி உள்ளார்.
5. அவரின் மீது மாணவர்களும், பெற்றோரும் பல்வேறு புகார்களை அளித்ததால் மாணவர்களின் நலன் கருதி, அவர் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார்.
5. அதன் பிறகே இது போன்ற அவதூறுகளை பரப்புகிறார், அதுவும் குறிப்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முதல் நாள் ஏன் இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த வேண்டும்.
6. அந்த நபரின் குற்றச்சாட்டுகளில் அடிப்படை ஆதாரங்கள் இல்லாதவை, மேலும் அவரின் செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டதாகவும், கேள்விக்குறியதாகவும் இருக்கிறது.
ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து யாமினி ராகினி என்ற நபர் கடந்த 17.10.2024-அன்று நடைப்பெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
யாமினி அவர்களின் மகன் ஈஷா ஹோம் ஸ்கூலில் பள்ளிக் கல்வி முடித்து வெளியேறிய பின்னர், அதே பள்ளியில் ஆசிரியையாக ஜூன் 2022 முதல் மார்ச் 2024 வரை தன்னார்வ தொண்டு செய்தார். அவர் மீது பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் புகார்களை அளித்து வந்தனர். அதன் அடிப்படையில் அவரை பள்ளியை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதிலிருந்து, அவர் பல்வேறு நபர்களை தொடர்பு கொண்டு தவறான குற்றச்சாட்டுகளால் ஈஷா அறக்கட்டளையை இழிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் கூறும் 'குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை,' இதன் மீது சட்டப்படி உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
'குழந்தைகளின் பாதுகாப்பு எப்போதும் எங்களின் முன்னுரிமையாக இருந்து வருகிறது' என்பதை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறோம். எங்கள் குழந்தைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை சமரசம் செய்யும் எந்தவொரு நடத்தையையும் சிறிதளவும் ஏற்றுக்கொள்ளாத கடுமையான கொள்கைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்கனவே ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து முழுமையான ஆய்வு செய்து பள்ளியின் பல்வேறு அம்சங்களைப் பாராட்டியுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம். மேலும் ஈஷா ஹோம் ஸ்கூல், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications