ஈஷா மையத்தையும் ஈர்த்த காந்தாரா! யோகா மையத்தில் திரையிடப்பட்ட 2வது படம்! முதல் சினிமா எது தெரியுமா?
கோவை: கர்நாடகா மட்டுமின்றி இந்தியா எங்கும் சூப்பர் ஹிட் அடித்துள்ள 'காந்தாரா' திரைப்படம் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திரையிடப்பட்டது.
கோவையில் ஈஷா யோகா மையம் அமைந்தது முதலாக அங்கு இதுவரை ஒரே ஒரு திரைப்படம் தான் திரையிடப்பட்டிருந்த நிலையில், 'காந்தாரா' இரண்டாவது படமாக திரையிடப்பட்டுள்ளது.
குலதெய்வ வழிபாடு உள்ளிட்ட சில அம்சங்களை பற்றி மிக ஆழமாக இந்த திரைப்படம் பேசுவதால் ஈஷா யோகா மையத்தில் இப்படம் திரையிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

'வேற லெவல்' ஹிட்
கர்நாடகா திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் அந்த மாநிலத்தை தவிர வேறு எங்கும் அவற்றை பற்றிய பேச்சு இருக்காது. மிகவும் கமர்ஷியலாக, ஹிரோயிஸத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே அவை இருப்பதால் மற்ற மாநில ரசிகர்களை கர்நாடகா சினிமா ஈர்த்ததில்லை. ஆனால், அண்மையில் வெளிவந்த கேஜிஎஃப் திரைப்படம்தான் முதன்முதலில் இந்த தடையை உடைத்து இந்தியா முழுவதும் வேற லெவல் ஹிட் அடித்தது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது 'காந்தாரா' திரைப்படம்.

குலதெய்வ வழிபாடு
கர்நாடக கடலோரப் பிராந்தியத்தை களமாக கொண்டு இந்த 'காந்தாரா' படம் எடுக்கப்பட்டுள்ளது. பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்கும் இடையேயான நிலப் பிரச்சினை, குல தெய்வ வழிபாடு என பல அம்சங்களை இந்த திரைப்படம் சுவாரசியமாக பதிவு செய்துள்ளதால் கர்நாடகாவையும் தாண்டி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி என பல மாநிலங்களில் இந்த திரைப்படம் சக்கை போடு போட்டு வருகிறது.

கடும் விமர்சனம்
இதனிடையே, ஒருபுறம் பாராட்டு பெற்றபோதிலும், மறுபுறம் இந்த திரைப்படத்திற்கு எதிரான விமர்சனங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதாவது, வலதுசாரி கண்ணோட்டத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மது, மாமிசத்தை தவிர்ப்பது, சாமியை வழிபடுவது நல்லது போன்ற கருத்துக்களை சொல்வதாகவும், இந்து மத கருத்துகளை பரப்புவதாகவும் ஒருதரப்பினர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும், படம் அனைத்து சென்டர் மக்களையும் காந்தாரா, காந்தம் போல ஈர்க்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஈஷா யோகா மையம்
இந்நிலையில், இந்த 'காந்தாரா' திரைப்படத்தை கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தீபாவளி தினமான கடந்த 24-ம் தேதி திரையிடப்பட்டுள்ளது. ஆன்மீக மையமான ஈஷாவில் திரைப்படங்கள் திரையிடுவது என்பது மிகவும் அரிதான ஒன்று. இதற்கு முன்பு ஜான்சி ராணி லட்சுமிபாய் கதையை அடிப்படையாக கொண்ட 'மணிகர்னிகா' என்ற திரைப்படம் ஈஷா யோகா மையத்தில் திரையிடப்பட்டது. அதன் பிறகு, அங்கு திரையிடப்படும் இரண்டாவது திரைப்படம் என்ற பெயரை 'காந்தாரா' பெற்றுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications