வெற்றி, தோல்வி என்பது சகஜம்தான்.. பாஜக துடைத்தெறியப்பட்டதா? கொந்தளித்த வானதி சீனிவாசன்
கோவை: கர்நாடகாவில் பிரதான கட்சியாக பாஜகவிற்கு தான் மக்கள் வாய்ப்பு அளித்து இருக்கிறார்கள். பாஜக வாக்கு சதவிகிதம் அப்படியேத்தான் இருக்கிறது. வெற்றி, தோல்வி என்பது சகஜம்தான் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது. இதில் கோவை தெற்கு தொகுதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:-
கர்நாடகாவில் நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை பாஜக ஏற்றுக்கொள்கிறது. கர்நாட்சகாவில் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை கட்சி தலைமை கண்டிப்பாக ஆராயும். மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் உழைப்பை மேற்கொள்ளும்.

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பை பூரணமாக நிறைவேற்றும் வகையில் இந்த தேர்தல் முடிவு எங்களை தயார்படுத்துகிறது. மக்களிடம் இன்னும் நெருக்கமான அணுகுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள இது உதவிகரமாக இருக்கும். தோல்விக்கு ஒரு குறிப்பிட்ட காரணம் என்று யாராலும் சொல்ல முடியாது.
இந்த தேர்தல் முடிவை வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேறுமாதிரியான கனவு கொண்டு இருக்கிறார். ஒரு முறை தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் அந்த மாநிலத்தில் இருந்து கட்சி துடைத்தெறியப்படும் என்றால் திமுக தமிழ்நாட்டில் இருந்து எத்தனை முறை துடைத்தெறியப்பட்டு இருக்கிறது என்பதை அவர் யோசித்து பார்க்க வேண்டும்.
கர்நாடகாவில் பிரதான கட்சியாக பாஜகவிற்கு தான் மக்கள் வாய்ப்பு அளித்து இருக்கிறார்கள். திராவிட நிலப்பரப்பு என்பதை இவரைத்தவிர மற்ற மாநில முதல்வர்களே ஒத்துக்கொள்ளாத போது அலங்காரத்திற்கு இவர் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். காங்கிரஸ் கட்சி முதலில் விழித்துக் கொள்ளட்டும். கர்நாடகாவில் தற்போது மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளனர்.
பாஜக வாக்கு சதவிகிதம் அப்படியேத்தான் இருக்கிறது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து சரி செய்வோம். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜக அமைக்க முடியவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. எனவே கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
திருமாவளவன் திமுகவில் கூட்டணியில் இருப்பதால் பட்டியல் இன பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை என்பதை 2 ஆண்டாக பார்த்து வருகிறோர். ஒரு பிரச்சினைக்குகூட அவரால் தீர்வு காண முடியவில்லை. எனவே அவர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்.
சமூக நீதி பேசும் திமுக பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு துணை முதல்வர் பொறுப்போ அல்லது முக்கிய இலாக்காவை அந்த சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அதற்குபதிலாக எது திராவிட மாடல் என்றால் வாரிசு அரசியல்குடும்ப அரசியல் இதெல்லாம் சேர்ந்ததுதான் திராவிட மாடல் என்று நிரூபித்து கொண்டுஇருக்கிறார்கள். இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications