சோமண்ணா இணை அமைச்சராக இருக்கட்டும்.. அதனால் என்ன? மேகதாது அணை கட்ட முடியாது.. சவால் விடுத்த அண்ணாமலை
கோவை: தமிழகத்தின் அனுமதி இன்றி மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்றும் இதுதான் சட்டம். அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதை தொடர்ந்து அரசியல் ஆக்குகிறது. அணை கட்ட முடியாது என்று நான் சொல்கிறேன்.. காங்கிரஸ் கட்சியை சொல்ல சொல்லுங்க பார்க்கலாம் என்று அண்ணாமலை கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று மத்திய அரசு தெளிவாக சொல்லியுள்ளது.

மேகதாது அணை: மேகதாது அணை எந்த காலத்திலும் கட்டப்பட போவது இல்லை. இது நிதர்சனமான உண்மை. மத்திய அரசு தனது முடிவில் இருந்து எந்த மாறுதலும் எடுக்கவில்லை. கர்நாடகாவை சேர்ந்த சோமண்னா இணை அமைச்சராக உள்ளார். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவீர்களா என கேட்கிறார்கள். அவர் என்ன சொல்கிறார்.. எல்லா மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு முடிவு செய்யலாம்.
அணை கட்ட முடியாது: ஏனெனில் கர்நடகாவை சேர்ந்த சோமன்ணாவிற்கு தெரியும் தமிழ்நாடு, கர்நாடகா அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்று. ஒருவேளை பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டால் கூட தமிழக அரசு அங்கே போய் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொன்னால் போதும், அங்கேயே பேச்சுவார்த்தை முடிந்தது. அதனால் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது இதுதான் சட்டம்.
வாயே திறக்க மாட்டாங்க: இது ஒரு பேப்பரில் எழுதியுள்ள சட்டம். இதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் இதை அவர்கள் தொடர்ந்து அரசியல் ஆக்குகிறார்கள். இங்கே உள்ள காங்கிரஸ் கட்சி வாயே திறக்க மாட்டார்கள். பாஜக தொண்டனாக நான் சொல்கிறேன்.. மேகதாது அணை கட்ட முடியாது என்று.. காங்கிரஸ் கட்சியை சொல்ல சொல்லுங்க... ஏனெனில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இருப்பதால் என்ன சொல்வார்கள்..
காங்கிரஸ் டிராமா செய்கிறது: பிரதமரை போய் பார்க்கலாம்.. என்று சொல்வார்கள். சிதம்பரம் தலைமையில் இங்குள்ள காங்கிரஸ் தலைமையிலான ஒரு குழு சென்று டிகே சிவக்குமாரை பார்ப்பதில் என்ன பிரச்சினை.. காங்கிரஸ் எம்பிக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.
அவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையாவை சந்தித்து இதுதான் தமிழக மக்களின் நிலைப்பாடு.. நீங்க அணை கட்டாதீங்க.. கட்ட மாட்டேன் என்று சொல்லலாம்.. ஏன் போக மாட்டைக்குறாங்க..வெற்று டிராமா நடத்துகிறார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர்: கர்நாடகாவை சேர்ந்த சோமண்ண மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு- கர்நாடாகா இடையே காவிரி பிரச்சினை இருக்கும் நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரை நீர்வளத்துறை அமைச்சராக நியமித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதாவது, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளை கையாளும் நீர்வளத்துறை அமைச்சகத்தின் இணையமைச்சராக வி.சோமன்னா நியமிக்கப்பட்டிருப்பது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications