Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கையில் வாழைப்பழத்துடன் நின்ற பாஜக.. "மோடி சுட்ட வடை" யால் கோபம்.. கோவையில் செம ஹைலைட்.. அட திமுக வேற

Subscribe to Oneindia Tamil

கோவை: திமுகவினர் உளுந்த வடையை கொண்டுவந்தார்கள்.. உடனே பாஜகவினரோ, வாழைப்பழத்துடன் வந்துவிட்டனர்.. கோவையில் என்ன நடந்தது தெரியுமா?
எம்பி தேர்தல் நெருங்கி வருகிறது.. இதையடுத்து தொகுதி உடன்பாடுகள், சீட் விவகாரங்கள் என அனைத்து அரசியல் கட்சிகளுமே பிஸியாகி உள்ளன.. கூட்டணிகள் எந்த கட்சியிலும் இன்னும் முடிவாகவில்லை.

Kovai DMK BJP Protest and Do you know why did Coimbatore police stop Banana Modi sutta vadai Election Campaign

பிரச்சாரங்கள்: ஆனால், அதற்குள்ளேயே, எதிர்க்கட்சிகள் ஒருவரைக்கொருவர் தாக்கி பிரச்சாரங்களை மேற்கொள்ள துவங்கி உள்ளன.. அந்தவகையில், கோவையில் பாஜக + திமுக தரப்பினரின் பிரச்சாரங்கள் தமிழக மக்களை ஈர்த்து வருகின்றன.

பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாகவும், பாஜக அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றும் சொல்லி, நேற்று முன்தினம், கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் திமுகவினர் பொதுமக்களுக்கு வடை சுட்டு வழங்கினார்கள்..
மோடி சுட்ட வடைகள் என்று பல்வேறு திட்டங்களை, லிஸ்ட் போட்டு, அதனையும் துண்டு சீட்டாக பொதுமக்களிடம் விநியோகித்து பிரச்சாரம் செய்தார்கள்.

பிரதான சாலைகள்: அதேபோல, கோவையின் பிரதான சாலைகளில், ஃப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பேனர்களில், இந்த 10 வருட ஆட்சியில் பாஜக அறிவித்த 15 திட்டங்கள் பட்டியலிட்டு, அந்த திட்டங்கள் எதுவுமே இன்னும் நிறைவேற்றவில்லை. வெறும் வாயால் வடை சுட்டு வருகிறார் பிரதமர் மோடி என்றும் விமர்சனங்கள் அந்த பேனரில் இடம்பெற்றிருந்தன.

மற்றொருபக்கம், தள்ளு வண்டி கடைகளில் கடைக்கு வந்த கஸ்டமர்களுக்கு, மோடி முகம் பொறித்த மாஸ்க் அணிந்து, சுடச்சுட வடை சுட்டு துண்டு பிரசுரங்களையும் வழங்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சில இடங்களில் அதே துண்டு பிரசுரங்களில், உளுந்த வடைகளும் விநியோகம் செய்யப்பட்டன.

வாழைப்பழங்கள்: திமுகவின் இந்த பிரச்சாரத்தை பார்த்து அதிர்ந்து போன பாஜக, பதிலுக்கு திமுகவை விமர்சிக்கும் பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுமக்களுக்கு வாழைப்பழம் கொடுத்து ஏமாற்றிவிட்டதாக சொல்லி பாஜகவினர் வாழைப்பழத்துடன் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

உடனே, பாஜகவினர், முதல்வர் ஸ்டாலினின் முகமூடியையும், கையில் வாழைப்பழத்துடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... மேலும், திமுக தந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பொதுமக்களை ஏமாற்றி விட்டதாக சொல்லி முழக்கமிட்டார்கள்.. வாக்குறதி சொல்லி ஏமாற்றி பொதுமக்களுக்கு வாழைப்பழத்தை திமுக தந்துவிட்டதாகவும் கூறினார்கள்.

திமுக பிரச்சாரம்: கோவை சிவானந்தா காலனியில் பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கையில் வாழைப்பழத்துடன் திரண்டு வந்தனர். அந்த வாழைப்பழத்தை பொதுமக்களுக்கும் வழங்கி திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முயன்றனர்.

ஆனால், திரண்டு வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். அத்துடன், கையில் வைத்திருந்த வாழைப்பழத்தையும் பொதுமக்களுக்கு வழங்க அனுமதி மறுத்தனர். மீறி வாழைப்பழத்தை பொதுமக்களுக்கு வழங்கினால் கைது செய்ய நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

திணறிய பாஜகவினர்; இதனால், வாழைப்பழங்களை பொதுமக்களுக்கு கொடுக்க முடியாமல் பாஜகவினர் ஏமாந்து போனார்கள்.. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல், தாங்கள் கொண்டு வந்திருந்த வாழைப்பழங்களை, தாங்களே சாப்பிட்டார்கள்.. மக்கள் சாப்பிடுவதாக கூறி எல்லா வாழைப்பழத்தையும் பாஜ்கவினரே சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கவில்லை.. அதுக்குள்ளேயே வடை + வாழைப்பழம் பிரச்சாரம் ஆரம்பமாகி விட்டது. இன்னும் என்னென்ன நூதனங்கள் இந்த தமிழ்நாட்டில் நடக்க போகிறதோ தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+