ஐடி பெண் ஊழியர்களின் அறையில் எட்டிப் பார்த்த நபர்.. அடுத்து செய்த காரியம்.. கோவையில் ஷாக்
கோவை: கோவையில் உள்ள ஐடி நிறுவனங்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து தங்கி ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஈச்சனாரி பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் விடுதிக்குள் மர்ம நபர் ஒருவர் இன்று காலையில் புகுந்து அங்கிருந்த லேப்டாப்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. கோவையில் ஏராளமான முன்னணி கல்வி நிறுவனங்கள், பிரபலமான ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் போன்ற பல்வேறு தேவைகளுக்காக கோவையில் வசித்து வருகின்றனர்.

சமூக விரோத சம்பவங்கள்
குறிப்பாக, கோவையில் உள்ள ஐடி நிறுவனங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். கோவையில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, நகைப் பறிப்பு, திருட்டுச் சம்பவம் போன்ற சமூக விரோத செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் விடுதி அறைக்குள் நுழைந்து லேப்டாப்பை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறைக்குள் வந்த மர்ம நபர்
கோவை மாவட்டம், ஈச்சனாரி பகுதியில் ரத்தினம் ஐ.டி. பார்க் உள்ளது. இந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பெண்கள் சுந்தராபுரம் - மதுக்கரை மார்கெட் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கிப் பணியாற்றி வந்துள்ளனர். இரண்டு பெண்களும் விடுதியில் இருந்து காலையில் வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று காலை 6.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் அறைக்கு வந்துள்ளார்.
லேப்டாப் திருட்டு
அந்த மர்மநபர் அறையின் வாசலில் நின்று ஐன்னல் வழியாக அறைக்குள் எட்டிப் பார்த்துள்ளார். பின்னர், அறைக்குள் நுழைந்து அங்கிருந்த இரண்டு லேப்டாப்புகளை திருடிச் சென்றுள்ளார். மீண்டும் அறைக்குத் திரும்பிய ஐ.டி. ஊழியர்கள் லேப்டாப் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், அங்கு பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது லேப்டாப்பை மர்மநபர் திருடிச் செல்வது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் குறித்து கோவை சுந்தராபுரம் காவல் நிலையத்தில் இரு பெண்களும் புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications