மொத்தம் 10 பேர்.. 15 வயது சிறுமியை.. 4 வருஷமாக மிரட்டி மிரட்டியே.. பாதி பேர் சிறார்கள்.. கோவை ஷாக்!

15 வயது சிறுமியை மிரட்டி மிரட்டியே நாசம் செய்துள்ளனர் 10 பேர்

Subscribe to Oneindia Tamil

கோவை: மொத்தம் 10 பேர்... 4 வருடங்களாக 15 வயது சிறுமியை தனித்தனியாக மிரட்டி நாசம் செய்து வந்திருக்கிறார்கள்.. கொரோனா அச்சுறுத்தல் சமயத்தில் இப்படி ஒரு கொடூரம் கோவையில் நடந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி.. 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.. கொஞ்ச நாளாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மகளை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அவளது பெற்றோர் அழைத்து சென்றனர்.

அங்கு டெஸ்ட் செய்யப்பட்ட பிறகுதான் அதிர்ச்சி காத்திருந்தது.. சிறுமி 2 மாசம் கர்ப்பம் என்று ரிசல்ட் வந்தது.. இதனால் எதுவுமே புரியாமல் விழித்த பெற்றோர், என்ன செய்வதென்றும் குழம்பினர்.. தொடர்ந்து சிகிச்சையில் மகளை அங்கேயே அனுமதித்திருந்த நிலையில், திடீரென அவர்கள் மகளை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பி சென்றுவிட்டனர்.

சிறுமி

சிறுமி

சிகிச்சையில் இருந்த சிறுமியை காணோம் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் போலீசுக்கு தகவல் சொல்லியது... இறுதியில் போலீசார் சிறுமியை கண்டுபிடித்து, அவரிடம் விசாரணையும் மேற்கொண்டனர். அப்போது சிறுமி சொன்ன விஷயத்தை கேட்டு போலீசார் அதிர்ந்துவிட்டனர். சிறுமியிடம் 10 பேர் பழகி வந்துள்ளனர்.. இவர்கள் 10 பேருமே சிறுமியை காதலிப்பதாக சொல்லி உள்ளனர்.. இந்த 10 பேரில் 17 வயது சிறுவர்களே அதிகம்!!!

மாணவர்கள்

மாணவர்கள்

ஒருவர் பழகுவது இன்னொருவருக்கு தெரியாது.. அதனால் 10 பேரும் தனித்தனியாக, வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. இதனாலேயே கர்ப்பமும் அடைந்துள்ளார். இதில், கோவையை சேர்ந்த கார்த்திக் 23, தனசேகர் 24, சந்தோஷ் 19, இவர்களை தவிர, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷாக் தகவல்

ஷாக் தகவல்

கைதானவர்களில் 4 பேரும் சிறுவர்கள் என்பதால் அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மீதமுள்ள 4 பேர் கோவை சிறையிலும் அடைக்கப்பட்டனர். சிறுமியை சீரழித்த மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.. இப்போது கைதாகி உள்ளவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது விசாரணையின்போது, இன்னொரு ஷாக் தகவலும் வெளியாகி உள்ளது.

விசாரணை

விசாரணை

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்தே இதில் பெரும்பாலானோர் சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.. வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.. மாணவர்களை தவிர மற்றவர்கள் சிறுமியின் அக்கம்பக்கம் வீட்டினை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. உயிருக்கு பயந்துகொண்டு சிறுமியும் எதையும் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்! அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.. இந்த சம்பவம் கோவையை மட்டுமல்லாமல் தமிழகத்தையே உலுக்கி எடுத்து வருகிறது!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+