சத்தமின்றி சம்பவம் செய்த கணபதி.. கோவையில் திமுக அமைதியாக நகர்த்திய காய்.. கொங்கு குலுங்குதே!
கோவை: கோவை சூலூரில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார்
அங்கே தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. மூன்று பேருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுவதால் களம் எப்படி மாறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோயமபுத்தூரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை - அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. இந்த வார்த்தை போருக்கு இடையே திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சத்தமின்றி அங்கே களப்பணிகளை செய்து வருகிறார்.
இவர் மீடியாக்களில் அதிகம் தோன்றாமல் தீவிரமாக களப்பணிகளை செய்து வருகிறார். உதாரணமாக கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு டவுன்ஹால் கோட்டைமேடு பகுதியில் உள்ள: 1.கோட்டை ஹிதாய்யத்துல் இஸ்லாம் சாஃபியா ஜமாத்
2. தரிக்கத்துல் இஸ்லாம் ஷாபியா ஜமாத்
3. கோட்டை கேரளா ஜமாத்
4. கோட்டை வின்சென்ட் ரோடு முஸ்லிமின் பள்ளிவாசல் பகுதிகளுக்கு சென்று பேசினார்.
அதன்பின் கோவையைச் சார்ந்த பிரபல தொழில் அதிபர் ஓ. ஆறுமுகசாமியை சந்தித்து ஆதரவு கோரினார். இது போக செயல் வீரர்கள் கூட்டமும் நடந்தது.
பொதுவாக தேர்தலில் ஜெயிக்க மீடியா பலத்தை விட.. நேரடியாக களத்தில் பணிகளை செய்வது முக்கியம். அப்படித்தான் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அங்கே உள்ள அமைப்புகள், பிரிவுகள், தொழிற்சங்கங்களை நேரில் சந்தித்து ஆலோசனைகளை செய்து வாக்கு சேகரித்து வருகிறார். பெரிதாக செய்திகளில் தோன்றாமல் நேரடியாக களப்பணிகளை செய்து வருகிறார்.
அங்கே வாக்குகளை பெரிய அளவில் தீர்மானிக்கும் சங்கங்கள், அமைப்புகளை சந்தித்து கணபதி ராஜ்குமார் வாக்குகளை கேட்டு வருகிறார்.
அதன் ஒரு கட்டமாக கோவை சூலூரில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர். இவர்களின் ஆதரவு மொத்தமாக திமுகவிற்கு செல்லும் என்பதால் மிகப்பெரிய வாக்கு வங்கி இங்கே சாதகமாக திரும்பும் வாய்ப்புகள் உள்ளன.
கள நிலவரம்; கோவையில் திமுகவின் பலம் தொடர்பாக நம்மிடையே பேசிய திமுகவினர், கோவையில் செந்தில் பாலாஜி கொடுத்த பிளான்படி பணிகள் நடக்கின்றன. அதிமுக, பாஜக வலுவாக இருந்தால் அங்கே மாநகராட்சி தேர்தலில் ஒன்றிலாவது வென்று இருக்க வேண்டுமே? ஏன் இல்லை. இதை திமுக பார்க்கிறது. அதனால்தான் கோவையில் நேரடியாக களமிறங்குகிறது. சேலத்திலும், களமிறங்குகிறது. பொள்ளாச்சியிலும் மீண்டும் களமிறங்கி உள்ளனர். கோவையில் செந்தில் பாலாஜி இல்லாமலே வெற்றிபெறுவோம்.. அவரை நீங்கள் சிறையில் போட்டுவிட்டீர்கள். அதனால் எங்கள் கட்சி தோல்வி அடையும் என்று நினைக்க வேண்டாம்.
அவர் இல்லாமலே நாங்கள் வெற்றிபெற்று காட்டுவோம். அவர் இல்லாமலே நாங்கள் வெற்றிபெற்று காட்டுவோம் என்று நிரூபிக்கவே இங்கே களமிறங்கி உள்ளனர் . முக்கியமாக அங்கே ஒரு ஜாதியின் வாக்குகள் அதிமுக - பாஜக இடையே பிரியும். இந்த நிலையில் தலித் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள், கேரளாவில் இருந்து வந்தவர்களின் வாக்குகள், அந்த குறிப்பிட்ட ஜாதிக்கு வெளியே இருக்கும் வாக்குகள் மூலம் வெல்ல முடியும்.
-
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications