தனிமையில் இருந்த "மிஸ்டுகால்" தனலட்சுமி.. விடிய விடிய டார்ச்சர் தந்த மன்மத ராசா.. கடைசியில் ஒரு கொலை
லவ் டார்ச்சர் தந்த நபரை குடும்பமே சேர்ந்து கொலை செய்துள்ளது
கோவை: ராத்திரி நேரம் ஆகிவிட்டால் "மிஸ்டுகால் தனலட்சுமி"க்கு போன் போட்டுவிடுவார் ஒரு ஜொள்ளு ஆசாமி.. விடிய விடிய டார்ச்சர் தந்து கொண்டே இருந்தவர், கடைசியில் தண்டவாளத்தில் பிணமாக விழுந்து கிடக்கும் பகீர் நிலை ஏற்பட்டுவிட்டது!
மேட்டுப்பாளையம் அருகே உள்ளது காரமடை பெரியார் நகர் பகுதி.. இங்கு வசித்து வருபவர்தான் தனலட்சுமி.. கல்யாணமாகிவிட்டது.. ஆனால், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.. இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

ஒரு வாரத்துக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு போன் வந்தது.. அது ஒரு மிஸ்டு கால்.. வேறு யாருக்கோ போன் போடுவதற்கு பதிலாக, அந்த போன் தனலட்சுமிக்கு வந்துவிட்டது.
விவரம் தெரியாத தனலட்சுமியும் அந்த நபரிடம் சகஜமாகவே ஆரம்பத்தில் பேசினார்.. ஆனால், அந்த நபரோ தனலட்சுமியின் குரலை கேட்டுவிட்டு, கிறங்கி போய்விட்டார்.. அதனால், அடிக்கடி போன் செய்து பேச ஆரம்பித்தார்.. ஒருகட்டத்தில் ஆபாசமாகவும், அசிங்கமாகவும் பேசினார்.. இறுதியில் தன்னுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த தொடங்கினார்.
பொறுத்து பொறுத்து பார்த்த தனலட்சுமி தன்னுடைய சொந்தக்காரர்களிடம் இதை தெரிவிக்கவும், அதன்படியே அந்த மர்மநபருக்கு சரியான பாடத்தை கற்பிக்க முடிவானது.. அந்தநபரிடம் சாமர்த்தியமாக பேசிய தனலட்சுமி, "உங்களை நேரில் பார்க்கணுமே" என்று சொல்லி வர சொன்னார்.. அந்த மன்மத ராசாவோ, தனலட்சுமியை தேடி ஆவலுடன் ஓடிவந்தார்.. தனலட்சுமி வீடு எங்கே என்று தெரியாமல், அந்த பகுதி மக்களிடம் அட்ரஸ் கேட்டுக் கொண்டு சரியான வீட்டுக்கு வந்துவிட்டார்.
அப்போதுதான் வீட்டுக்குள் தனலட்சுமி தவிர, அவரது அம்மா உட்பட மொத்த குடும்பத்தினரும் இருப்பதை கண்டு அதிர்ந்து போய்விட்டார் அந்த நபர்.. பிறகு குடும்பமே சேர்ந்து அந்நபரை மரத்தில் கட்டிவைத்து தாக்கி உள்ளது.. சரமாரியாக அடித்ததில் அந்த நபர் உயிர் பரிதாபமாக பிரிந்தது.. இதையடுத்து, சடலத்தை கொண்டுபோய், வீட்டின் அருகில் உள்ள தண்டவாளத்தில் தூக்கி வீசிவிட்டனர்.
விடிகாலையில் ரயில்வே தண்டவாளத்தில் பிணத்தை கண்டதும் அந்த பகுதி மக்கள் காரமடை போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.. அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரணையும் நடத்தினர்.. அப்போதுதான், கொலையுண்டவர் பெயர் பெரியசாமி என்பதும், கோவை ரத்தனபுரி பகுதியை சேர்ந்த இவர் செக்யுரிட்டியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இவரும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருபவர்.. இதையடுத்து, இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மிஸ்டு கால் கொடூர கொலை வரை சென்ற சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications