மிகப்பெரிய சேவை... மன் கி பாத்தில் "கோவை யோகநாதனை" பாராட்டிய பிரதமர் மோடி.. யார் இவர்? - பின்னணி
கோயம்புத்தூர்: கோவையை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் யோகநாதன் குறித்து பிரதமர் மோடி இன்று மன் கி பாத் உரையில் பேசினார்.
பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்தியா முழுக்க இருக்கும் திறமையானவர்களை அடையாளம் காட்டும் வகையில் பல்வேறு சாதனையாளர்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி எல்லா மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் முன் வானொலியில் பேசுவது வழக்கம்.இந்த நிகழ்ச்சியில் மோடி முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருப்பார்.

பேச்சு
பிரதமர் மோடி இன்று தனது பேச்சில், சர்வதேச கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் 10000 ரன்களை பெண்கள் கிரிக்கெட்டில் எடுத்துள்ளார். இப்படி 10000 ரன் எடுத்த ஒரே பெண் இந்திய வீராங்கனை மிதாலிதான். மிதாலி ராஜ் மிகப்பெரிய ரோல் மாடல். அவரின் சாதனையை பாராட்டுகிறேன்.

பெண்கள்
இந்தியாவில் பெண்களும், ஆண்களும் சமமாக முன்னேறி வருகிறார்கள்.விளையாட்டில் பெண்கள் புதிய அத்தியாயத்தை உருவாக்கி வருகிறார்கள். விவசாயிகள் நவீன பண்ணை விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்தில் நவீனத்தை புகுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

கோவை
மேலும், கோவை யோகநாதன் குறித்து பிரதமர் மோடி இன்று மன் கி பாத் உரையில் பேசினார். அதில், அரசு பேருந்து நடுத்துனர் யோகநாதன் மரம் நடுவதில் புதிய புரட்சியை செய்துள்ளார். பயணிகளிடம் மரக்கன்றுகளை கொடுத்து நட வைத்துள்ளார். 30 வருடங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை யோகநாதன் நட்டு இருக்கிறார்.

யோகநாதன்
யோகநாதன் மிகப்பெரிய சேவையை நமது இயற்கைக்கு ஆற்றியுள்ளார், தனி நபராக ஒரு காட்டையே யோகநாதன் உருவாக்கி உள்ளார் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார் . கோவையை சேர்ந்த யோகநாதன் கடந்த 30 வருடங்களாக மரங்களை நட்டு வருகிறார். இதுவரை கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக மரங்களை நட்டு உள்ளார்.

பாராட்டு
இவரை பாராட்டி சிபிஎஸ்இ பாட திட்டத்தில் இவரின் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் இவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இவரை பாராட்டி தற்போது பிரதமர் மோடியும் மன் கி பாத் உரையில் பேசி உள்ளார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications