பொள்ளாச்சி வழக்கு: இது பத்தாது.. பாதிக்கப்பட்ட பெண்களுக்காக முக்கிய கோரிக்கை வைத்த மாதர் சங்கம்
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என்றும் மாதர் சங்கப் பொதுச் செயலாளர் ராதிகா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியானது. பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என்றும் மாதர் சங்கப் பொதுச் செயலாளர் ராதிகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர் ராதிகா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பை முழுமனதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீட்டுத் தொகை 8 பேருக்கு 80 லட்சம் தொகை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும். அதேசமயம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வந்த இந்த வழக்கில் முக்கியமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிக மிக அவசியமாகும்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தொடர்ச்சியாக இந்த வழக்குத் தொடர்பாக போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டம் நடத்தியதால் 4 வழக்குகள் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளுக்கு இப்போது வரை நாங்கள் நீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். காவல் துறையின் அச்சுறுத்தல்களை எல்லாம் தாண்டி, அந்த அச்சுறுத்தல்களை துச்சமென மதித்து கடுமையான போராட்டத்தை தமிழகம் முழுவதும் நாங்கள் நடத்தினோம்.
நாங்கள் நடத்தி போராட்டத்துக்கான வெற்றியாக இந்த தீர்ப்பைக் கருதுகிறோம். நிச்சயமாக இதுபோன்ற தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும். பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் நடக்கும்போது காவல் துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு இந்த சம்பவம் வெளியுலகத்திற்கு வந்தபோது அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இந்த வழக்குகளை மூடி மறைப்பதற்கும், குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், ஆட்சியாளர்களும் மேற்கொண்டனர்.
ஆனால், அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதன் விளைவாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி அளித்திருக்கும் இந்த தண்டனை மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் இன்னும் குறுகிய காலத்திலேயே இதுபோன்ற தண்டனைகள் வழங்கியிருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் வெளிவந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். வழக்கின் தீர்ப்பு காலதாமதமாகியிருந்தாலும், தீர்ப்பு வரவேற்கப்படக் கூடிய தீர்ப்பாக அமைந்துள்ளது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications