ஏப்ரல் 4 ஆம் தேதி மதுக்கடைகள், இறைச்சிகடைகள் இயங்காது.. கோவை மாநகராட்சி உத்தரவு.. காரணம் இதுதான்
கோவை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் நாளை மறுநாள் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை பின்பற்றால் இறைச்சிக்கடைகள் திறந்து வைத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் மஹாவீர் ஜெயந்தி ஏப்.4- ம் தேதி கொண்டாடப் படுகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வகை மது கடைகளும் அன்று மூடப்படுகிறது என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.
சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். 'நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்' என மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் போதனையை போதித்தவர் மகாவீரர்.

மகாவீர் ஜெயந்தி
ஜீனர், மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் மஹாவீரரின் போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகப் போற்றப்படுகிறது. நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வரும் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சமணர்களால் கொண்டாடப்படும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும்.

மாவட்ட நிர்வாகம் உத்தரவு
அதேபோல், மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக்கடைகளும், மதுக்கடைகளும் மூடபப்படுவது வழக்கம். அந்த வகையில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, கோவையில் வரும் செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்தும் மதுபான கடைகள், மதுபான பார்கள் மூடியிருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் நாளை மறுநாள் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

விதிமீறல்களில் ஈடுபட்டால்
இதனை பின்பற்றால் இறைச்சிக்கடைகள் திறந்து வைத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக சென்னை மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் மதுக்கடைகள், பார்கள், இறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

அனைத்து வகை மதுக்கடைகளும்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுவை மாநிலத்திலும் அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்படுவதாக புதுவை அரசு நேற்று அறிவித்தது. மகாவீர் ஜெயந்தி தினத்தன்று, புதுவையில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம், உரிமம் பெற்ற ஓட்டல்கள், கிளப் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்களை முழுவதுமாக மூட வேண்டும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications