சாதி மாறி திருமணம் செய்த பையனுக்கு அடி உதை - பெண்ணை தூக்கிச் சென்றதால் பதற்றம்
கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், மணமகன் குடும்பத்தினரை தாக்கி விட்டு பெண்ணை அவரது குடும்பத்தினர் நேற்று கடத்தி சென்றனர்.
கோவை: சாதி மாறி திருமணம் செய்தவர்களை ஆணவக்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கோவையில் சாதி மாறி திருமணம் மணமகனையும் அவரது பெற்றோரையும் தாக்கி விட்டு பெண்ணை தூக்கிச் சென்றுள்ள சம்பவம் கோவை துடியலூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடையர்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயனுக்கு திருச்சியை சேர்ந்த சக்தி தமிழனி பிரபா மீது காதல், இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோரிடம் எதிர்ப்பு கிளம்பியது. வீட்டினரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 5 ம் தேதி கோவையில் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.

கார்த்திகேயனின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக் கொண்ட நிலையில் சக்தி தமிழ் பிரபாவின் குடும்பத்தினர் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் திருமணத்தை முறையாக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, கார்த்திகேயனின் வீட்டில் தம்பதியர் வசித்து வந்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு சக்தி தமிழினி பிரபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்தனர். சமாதானம் பேசுவதற்காகத்தான் வந்திருப்பதாக இருவரும் நினைத்த போது அந்த கும்பல், கார்த்திகேயனையும், அவரது தாயார் வசந்தகுமாரியையும் தாக்கி விட்டு பிரபாவை காரில் கடத்தி சென்றனர். இந்தசம்பவம் அருகில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.

தாக்குதலில் காயமடைந்த வசந்தகுமாரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். கார்த்திகேயன் இது குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மனைவியை அவரது பெற்றோர் ஆணவக்கொலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், காவல்துறை தனது மனைவியை மீட்டு கொடுக்க வேண்டுமெனவும், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். துடியலூர் காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாதி மாறி திருமணம் செய்த பெண்ணை பெற்றோர் துடிக்க துடிக்க கடத்தி சென்ற வீடியோ இப்போது கோவையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications