பாதாள அறையும் இல்லை.. கட்டிலுக்கு அடியில் பணமும் இல்லை.. மறுக்கும் மார்ட்டின் மனைவி லீமா
வீட்டில் 98 ஆயிரம் மட்டுமே கைப்பற்றப்பட்டது என்று மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் கூறியுள்ளார்.
Recommended Video
கோவை: பாதாள அறையுமில்லை... கட்டிலுக்கு அடியில எந்த பணமும் இல்லை.. கட்டுக்கட்டாக பணம்னு சொல்றதெல்லாம் சுத்த பொய் என்று தொழிலதிபர் மார்ட்டின் மனைவி விளக்கம் அளித்துள்ளார்.
கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின். இவரது வீடு, ஆபீஸ் என 72 இடங்களில் போன வாரம் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது வீட்டில் சிக்கிய பணம் குறித்து ஒவ்வொரு விதமாக செய்திகள் வெளியே வந்தன. ஆனால் இவ்வளவு பணம்தான் கைப்பற்றப்பட்டது என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அதிகாரிகள் சொல்லவில்லை.
இந்நிலையில் வீட்டில் சிக்கிய பணம் குறித்து மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெளிவுபடுத்தி உள்ளதாவது:

வீட்டிலும் சோதனை
"போன மாசம் 30ம் தேதி மதியம் 12.30 மணியில் இருந்து எங்கள் வீடு, நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 4ம் தேதி இரவு வரை அந்த சோதனை நடந்தது. கடந்த 30ம் தேதி எங்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

கையொப்பம்
அந்த சோதனை நடந்தபோது, நானும் என் இளைய மகன் டைசனும் வீட்டில் இருந்தோம். சில ஊழியர்களும் வீட்டில் இருந்தார்கள். அப்போது எங்க வீட்டில 98 ஆயிரத்து 820 ரூபாயைதான் கைப்பற்றினார்கள். அதுவும் சட்டப்பூர்வ கைப்பற்றுதல் படிவமானது, வருமான வரித்துறையின் உதவி இயக்குநரால், முத்திரையிடப்பட்டு கையொப்பம் இடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டுக்கட்டு பணம்
அப்படி இருக்கும்போது, எங்க வீட்டில கட்டிலுக்கு அடியில, படிக்கட்டுல, பாதாள அறையில கட்டுக்கட்டாக பணம் எடுத்தாங்க என்று தொடர்ந்து தொலைக்காட்சிகளில் தவறான செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பாதாள அறை
அப்படி ஒரு விஷயமே எங்க வீட்டில் நடக்கவில்லை. அப்படி ஒரு எந்த ஒரு அறையோ, கட்டிலோ மற்றும் படிக்கட்டுகளோ, எங்கள் வீட்டில் இல்லை. அந்த வீடியோவுக்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications