’5 ஆண்டுகளுக்கு மேலான சாலைகளே சேதம்’ வானதி சீனிவாசன் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி!
கோவை: கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் சாலைகள் மோசமாக இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மட்டும்தான் சீரமைக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது கோவை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கோவையில் சாலைகள் மோசமாக இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மெட்ரோ திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு செந்தில் பாலாஜி கூறுகையில், கோவை மெட்ரோ ரயில் திட்டம் வரலாற்று சிறப்புமிக்க திட்டம்.

செந்தில் பாலாஜி பேட்டி
இதற்காக பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்துள்ளனர். மெட்ரோ அமைக்கும் பணிகளுக்காக ரூ.9 ஆயிரம் கோடி நிதிக்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் நிதி ஆதாரங்கள் பெற்று ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். கோவை மாவட்டத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்து வருகிறார்.

கோவைக்கான திட்டங்கள்
ஐடி நிறுவனங்களுக்காக டிஎன் டெக் சிட்டி திட்டம் கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்கா அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் எழில்மிகு கோவை திட்டம் யாரும் எதிர்பார்க்காதது. மானியக் கோரிக்கைகளிலும் இன்னும் பல அறிவிப்புகள் வெளியாக உள்ளது என்று தெரிவித்தார்.

மத்திய சிறை மாற்றம்
தொடர்ந்து கோவை மத்திய சிறைச்சாலை மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, கோவை மத்திய சிறை மாற்றப்பட்டால் தான் செம்மொழி பூங்கா அமைக்க முடியும். தற்போது செம்மொழி பூங்காவுக்கான ஒரு பகுதிகள் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மீதமுள்ள பணிகள் சிறைச்சாலை மாற்றம் செய்யப்பட்ட பின் நடைபெறும் என்று தெரிவித்தார். அதேபோல் சாலைகளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் தான். 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் ஒரு சாலை அமைக்க முடியாது. ஆனால் 5 ஆண்டுகளுக்கான மேலான சாலைகள் தான் கோவையில் அதிகளவில் பழுதாக உள்ளது.

அதிமுக ஆட்சியில் சாலைகள்
கடந்த ஆட்சியில் கோவையின் சாலைகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இருசக்கர வாகனம் கூட போக முடியாத சூழல் தான் இருக்கிறது. குறிப்பாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படவில்லை. அதனை கவனத்தில் கொண்டு தான் ரூ.223 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கோவை மாநகராட்சியில் மட்டும் 121 கிமீ தூரத்திற்கு சாலை பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கோவைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு
தொடர்ந்து, கோவையில் ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தப்படும். வெள்ளலூர் பேருந்து நிலையத் திட்டம் நிச்சயம் விரைந்து கொண்டு வரப்படும். கோவையில் சாலைகள் அமைக்கப்படும் திட்டத்திற்கான டெண்டர் பணிகள் முடிவடைந்து இன்று தொடங்கியுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 6 இடங்களில் சாலைகள் புதுப்பிக்கும் திட்டம் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் புதுப்பிக்கப்படாத சாலைகள் குறித்து மக்கள் அளித்த மனுக்கள் அடிப்படையில், மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு முதலமைச்சரிடம் கொண்டு சென்றோம். அதில் கோவைக்கு சிறப்பு நிதியாக ரூ.200 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டு, படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications