கமகம மணம்! கோவையில் 50,000 பேருக்கு மட்டன் பிரியாணி! மிலாது நபியில் அசத்திய இஸ்லாமியர்கள்!
கோவை: மிலாது நபியையொட்டி இன்று கோவை உக்கடத்தில் பள்ளிவாசல் சார்பில் 50 ஆயிரம் பேருக்கு கமகம மணத்துடன் மட்டன் பிரியாணி சமைத்து இலவசமாக வழங்கப்பட்டது.
இஸ்லாமிய இறை தூதரான முகம்மது நபி நினைவாக மிலாது நபி கொண்டாடப்பட்டு வருகிறது. 63 வயது வரை வாழ்ந்த இவர் இஸ்லாமிய மார்க்கத்தை எளிமையான போதனைகள் மூலம் கூறி வந்தார்.

இவர் அனைத்து மனிதர்களுக்கும் அன்பு மற்றும் ஒற்றுமையின் செய்தியை பரப்பினார். நபிகள் நாயகத்தின் பிறந்தநாளும், மறைந்தநாளும் ஒரே தினமாகும்.
நபிகள் நாயகம் கிபி 632 ரபியுல் அவ்வல் மாதம் 12ல் இவ்வுலகை துறந்தார். அல்லாவின் தூதராக கருதப்படும் அவரது நினைவை போற்றும் வகையில் முதல் முதலில் எகிப்தில் மிலாடி நபி கொண்டாடப்பட்டது. அதன்பிறகு பிற நாடுகளிலும் மிலாது நபி கொண்டாடப்பட்டு வருகிறது.

மிலாது நபி என்பதும் பிறை தெரிவதன் அடிப்படையில் தான் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தான் இதற்கான பிறை தமிழகத்தில் தெரிந்த நிலையில் இன்று தமிழகத்தில் மிலாது நபி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மிலாது நபி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
மேலும் பலர் நோன்பு வைத்து ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்கினார்கள். இதற்கிடையே தான் மிலாது நபியை முன்னிட்டு கோவையில் 50 ஆயிரம் பேருக்கு இலவசமாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. உக்கடத்தில் உள்ள பள்ளிவாசலில் 50 அடுப்புகள் வைத்து கமகம மணத்துடன் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.
***
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications