ரஜினி வந்துட்டார்னு வைங்க.. ஸ்டிரைட்டா போர்தான்.. ஐ ஆம் வெயிட்டிங்.. சீமான் அதிரடி
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் போர்தான் என்று சீமான் தெரிவித்துள்ளார்
சூலூர்: "பவானி ஆத்துல தண்ணி வருது. அதை எடுத்து சுத்திகரிப்பு பண்ணி என் மக்களுக்கு தர்றதைவிட இந்த ஆட்சிக்கும், மாநகராட்சிக்கும் என்ன வேலை?" என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. இது சம்பந்தமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன் கட்சி வேட்பாளருக்காக வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:
"ரஜினிகாந்த் இப்போ அரசியலுக்கு வந்துட்டார்னு வைங்க.. ஸ்டிரைட்டா போர்தான்! ஒரே கேள்விதான்.. தமிழன் மண்ணில் மராட்டியனுக்கு என்ன வேலை? ஒரு கேள்விக்கும் பதில் சொல்லி தப்பிக்க முடியாது. அதுவும் பொது விவாதத்துக்கு எல்லாரையும் கூப்பிடுன்னு சொல்லிடுவேன். நேருக்கு நேர் சண்டை வந்துடும் ஆட்டம் காலியாயிடும். அந்த நாளுக்காக ஐ ஆம் வெயிட்டிங்!

செத்தா தான் முடியும்
8 வழிச்சாலை, ஏன்டா.. ரோடு போட்டா நாடு வளர்ந்துடும்ன்னு எந்த முட்டாப்பய சொல்லிக் கொடுத்தது? நீ யாருக்காக ரோடு போடுறேன்னு எனக்கு தெரியாதா? அன்னைக்கு 8 வழிச்சாலைக்கு நாங்க போராட்டம் செஞ்சப்போ, என் தாத்தா, பாட்டிங்க என் கைய பிடிச்சு, "எங்களை கைவிட்டு போயிடாதே சாமி, என் குல தெய்வமா உன்னை பாக்கறேன்னு" சொன்னது இன்னமும் என் காதில் விழுது. உன்னால சாலை போடவே முடியாது ராஜா. நான் செத்தாதான் அது முடியும்.

பவானி ஆறு
மக்கள் மேல எங்களுக்கு அக்கறை இருக்கு. இப்ப மட்டும் இல்லை, அடுத்து வர்ற தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் நாங்க தனித்துதான் போட்டியிடுவோம். பவானி ஆத்துல தண்ணி வருது. அதை எடுத்து சுத்திகரிப்பு பண்ணி என் மக்களுக்கு தர்றதைவிட இந்த ஆட்சிக்கும், மாநகராட்சிக்கும் என்ன வேலை?

பத்து பிழை வருது
எந்த தலைவனும் புத்தகம் படிக்கிறது இல்லை, சிந்திக்கறதும் இல்லை. எழுதி வச்சி படிச்சாலும் பத்து பிழை வருது. இந்த நாடு இவங்க கிட்ட சிக்கிட்டு படற பாடு இருக்கே?

சோறு, தண்ணி கிடையாது
விவசாயம் என்பது தொழில் இல்லை, அது நம் வாழ்வியல். அதை நக்கல் பண்ணி பதிவு போட்டிருக்கானே, அவனுங்கள எல்லாம் எடுத்து இருட்டு அறைக்குள்ள போட்டு பூட்டி சாவியை நான் வெச்சுப்பேன். 10 நாள் பச்சை தண்ணி கிடையாது, சோறு கிடையாது. அப்போ தெரியும் இல்லை, இவங்களுக்கு விவசாயியின் அருமை! வல்லபாய் படேலுக்கு 3000 கோடியில சிலை வெச்சிருக்காங்க பாருங்க, அதே மாதிரி என் விவசாயிக்கு நான் ஒரு சிலை வெக்கிறேன், அதை வர்றவன், போறவன் எல்லாம் கும்பிட மாதிரி வெக்கிறேன்,
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications