கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடினமான ஆசனங்களையும் சர்வ சாதாரணமாக செய்த கோவை நானம்மாள் மறைந்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பத்ம ஸ்ரீ விருது பெற்ற யோகா ஆசிரியர் நானம்மாள் காலமானார்.

    கோவை: கடினமான யோகாக்களையும் சர்வசாதாரணமாக செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நானம்மாள் பாட்டி காலமானார். அவருக்கு வயது 99.

    கோவை கணபதி பகுதியில் வசித்து வந்தவர் நானம்மாள் (99). பொள்ளாச்சிக்கு அருகே உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் விவசாய குடும்பமாகும்.

    Nanammal Paati died at the age of 99

    இவரது தாத்தா மன்னார்சாமியிடமிருந்து யோகாசன பயிற்சிகளை கற்றுக் கொண்டார் நானம்மாள். இதனால் இறக்கும் வரை கடினமான யோகா பயிற்சிகளை செய்து வந்தார்.

    மிகவும் வயதான யோகா டீச்சராக விளங்கினார். இவரிடம் கற்று கொண்ட 600 பேர் இன்று உலகம் முழுவதும் யோகா ஆசிரியர்களாக உள்ளனர். இந்த 600 பேரில் 36 பேர் நானம்மாள் குடும்பத்தினர் ஆவர். இவரிடம் பயின்ற மாணவர்கள் சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், லண்டன், தாய்லாந்து ஆகிய நாடுகளில் போட்டியிட்டு தங்கம் வென்றுள்ளனர்.

    இவர் கடந்த 2018-ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதை பெற்றார். பெண் சக்தி விருதையும் குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றுள்ளார். இவர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இதனால் இவர் வசித்து வந்த பகுதி மக்கள் மிகவும் சோகமாக உள்ளனர்.

    English summary
    Coimbatore Nanammal died at the age of 99 because of her age related problems.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X