செங்கோட்டையன் ஏரியாவிலேயே நுழைந்த செந்தில் பாலாஜி! திமுகவில் இணைந்த 30 விஜய் கட்சியினர்!
கோவை: தவெகவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். அது போல் கோவை வடக்கு மாவட்ட பாஜக, சமூக ஊடகப்பிரிவு மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் சூடுபிடித்து வருகிறது. வரும் ஏப்ரலில் தேர்தல் நடைபெறுகிறது. மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

அது போல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அடுத்தடுத்த நகர்வுகளுக்கு செல்லத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் கட்சி தாவல் நிகழ்வுகளும் அவ்வப்போது ஏற்படுகிறது.
தவெகவில் இருந்து அதிமுக, திமுகவிற்கு இணைவதும் அங்கிருந்து தவெகவில் இணைவதும், பாஜகவில் இருந்து திமுக, அதிமுக, தவெகவில் இணைவதும் அங்கிருந்தவர்கள் பாஜகவில் இணைவது என நடந்து வருகின்றன.
மாவட்டந்தோறும் உள்ள அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தியில் உள்ளவர்களை அழைத்து பேசி தங்கள் கட்சிக்குள் இணைத்துவிடுகிறார்கள். இந்த நிலையில் தவெகவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அது போல் கோவை வடக்கு மாவட்ட பாஜக, சமூக ஊடகப்பிரிவு மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். அது போல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். திமுக ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத், அங்கிருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
திமுகவில் இருந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம், அதிமுகவில் இணைந்துள்ளார். அது போல் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ வி.பெரியசாமியின் சகோதரர் அருணாச்சலம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
இப்படியாக தற்போது கட்சி தாவல்கள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் இருந்த தவெகவினர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். அதுவும் செந்தில் பாலாஜி முன்பு இணைந்துள்ளனர்.
கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான செந்தில் பாலாஜி, மாற்று கட்சியில் அதிருப்தியாளர்களை கண்டறிந்து அவர்களை தங்கள் கட்சியில் இணைய வைக்கிறார் என சொல்லப்படுகிறது. அது போல் மாற்று கட்சியில் இருந்து வரும் நபர்களுக்கு கட்சி பதவிகளும் வழங்கப்படுகின்றன. அதுவும் திமுகவில் மாற்றுக் கட்சியினருக்கு ராஜ மரியாதை கொடுக்கிறார்கள்.
அப்படித்தான் செந்தில் பாலாஜி, சேகர்பாபு, ரகுபதி உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து தற்போது அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களாகியுள்ளனர். அண்மையில்தான் ஈரோடு பொதுக் கூட்டத்தில் விஜய் பேசியிருந்தார். கொங்கு மண்டலத்தை வரும் தேர்தலில் கைப்பற்ற தவெக வலுவடைய வேண்டும் என்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் கட்சி தாவல்கள் நிர்வாகிகளுக்கு சுணக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications