"ஏ.. வாத்தியாரே.. உன்னை சும்மா விடமாட்டாங்க".. மிதுனை பார்த்து கொந்தளித்த நபர்.. கோர்ட்டில் பரபரப்பு
மிதுனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கி உள்ளது
கோவை: கோவையில் பாலியல் தொல்லை காரணமாக, பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஆசிரியர் மிதுனை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
Recommended Video
கோவையில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த வாரம் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்... முன்னதாக, மாணவி எழுதியதாக ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைதாகி உள்ளார்.. அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மாணவி
அதேபோல, பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் தந்தும், அதன்மீது நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைதாகி உள்ளார்.. அவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செய்யப்பட்டுள்ளது.. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது..

உத்தரவு
கோவை மேற்கு மகளிர் ஸ்டேஷனில் மீரா ஜாக்சன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்திற்கு 5 இலட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்... இந்நிலையில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது...

வழக்கு விசாரணை
அப்போது கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்காக மிதுன் சக்கரவர்த்தியை போலீசார் கோர்ட்டுக்கு பத்திரமாக அழைத்து வந்திருந்தனர்.. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மறுபடியும் அவரை வெளியே அழைத்து வந்தபோது, நீதிமன்ற வளாகத்திலிருந்த ஒருவர் மிதுனை பார்த்து திடீரென சத்தம் போட்டார்..

விசாரணை
"வாத்தியாரே, உன்னை சும்மா விட மாட்டாங்க... கண்டிப்பா தண்டனை கிடைச்சே தீரும்" என்று முழக்கமிட்டார்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.. இதையடுத்து, அந்நபரை சமாதானப்படுத்திய போலீசார், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.. அந்த நபரின் பெயர் இஸ்மாயில் என்பதும், உக்கடம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.. 5 நாள் அவகாசம் கேட்ட நிலையில், வெறும் 2 நாளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளதால், மிதுனிடம் விசாரணை துரிதமாகி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications