பொள்ளாச்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழாவில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை வட்டாரத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் முக்கியமானது கோவில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில். இங்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் மாசாணி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் கோபுரங்கள் அலங்கரிக்கபட்டு இருந்தன. யாகசாலையில் வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாசாணி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு அமைச்சர் செந்தில்பாலாஜி, முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கோவில் அறங்காவலர் முரளி கிருஷ்ணா, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, எம்.பி.ஈஸ்வரசாமி, சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, டி.ஜ.ஜி, சரவண சுந்தர், மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார், அறநிலைய துறை மற்றும் பிற துறை சார்ந்த அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பொள்ளாச்சி, ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இன்று சுமார் இரண்டரை லட்சம் பகத்தர்கள் பங்கேற்றதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், போக்குவரத்து வசதிகளையும் அவற்றிற்கென அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மேற்கொண்டுள்ளன.
மாசாணியம்மன் கோவிலில் இன்று காலையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவையொட்டி மாசாணி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மாசாணி அம்மனை தரிசித்து வருகின்றனர்.

-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications